Tenkasi

News July 8, 2024

மாற்றுதிறனாளிகள் குறை கேட்பு முகாம்

image

தென்காசி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் முகாம் நாளை முதல் மாதந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஊராட்சி ஒன்றியங்களிலும், 2 மாதங்கள் ஒரு முறை 2வது செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் திட்ட இயக்குனர் அலுவலகத்திலும் நடைபெறயுள்ளது. இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் கமல்கிஷோர் கேட்டு கொண்டார்.

News July 8, 2024

கள்ளச்சாராய விழிப்புணர்வு கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியராக கூட்டங்கள் வைத்து இன்று கள்ளச்சாராயம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டு கள்ள சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

News July 8, 2024

வீட்டுமனை பட்டா வழங்கிய கலெக்டர் 

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று.8ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். அப்போது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வீரகேரளம்புதூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

News July 8, 2024

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மாலை 5.30 மணி வரை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. ஜூலை 12ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2024

தென்காசியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தென்காசி மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாள்களாக தென்காசியில் மழை பெய்து வருகிறது. மேலும், ஜூலை 12ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 7, 2024

மக்கள் நீதிமன்றத்தில் 29 வழக்கு முடித்து வைப்பு

image

தென்காசி மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல் தலைமை வகித்தார். இதில் தனியார் வங்கி தென்காசி, இலஞ்சி, வீராணம், கடையநல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை வங்கி கிளைகளில் இருந்து வழக்கு தொடரப்பட்ட 29 வழக்குகள் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.

News July 7, 2024

தென்காசியில் ‘மக்களுடன் முதல்வர்’ 

image

தென்காசி மாவட்டத்தில், ‘மக்களுடன் முதல்வர்’ 51 சிறப்பு முகாம்கள் 2ஆம் கட்டமாக வருகிற ஜூலை 11ஆம் தேதி முதல் அக்.29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 221 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் இந்த முகாமில், கொடுக்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என்றும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News July 6, 2024

தென்காசி எஸ்பி கடும் எச்சரிக்கை

image

தென்காசி மாவட்டத்தில் கனரக வாகனங்களை தடை செய்ய கோரி நாளை 7ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகின்றது. ஆனால் போராட்டம் நடத்த காவல்துறையினரிடம் எந்த ஒரு முறையான அனுமதியும் பெறவில்லை. உரிய அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு 

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தென்காசி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜூலை 16ஆம் தேதி அன்று மாவட்ட அளவில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் தென்காசி இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பரிசுகள் வெல்லுமாறு இன்று கேட்டுக் கொண்டார்.

News July 5, 2024

தென்காசி: முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு முகாம்

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தென்காசியில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் ஜூலை 10 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!