Tenkasi

News July 12, 2024

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

image

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அதிமுக தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று 11ம் தேதி இரவு அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் தலைமை வகித்தார். கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிமுக வளர்ச்சி குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு விகிதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

News July 11, 2024

சீசன் தொடக்கம்: படையெடுக்கும் மக்கள்

image

தென்காசி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது குற்றாலம் தான். ஆம், தற்போது குற்றால சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 520 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை அழகோடு அமைந்திருக்கிறது. மேலும், அங்கு இருக்கும் துரியன் பழமும் பிரபலமானது. இப்பழத்தை தேடி வருடாவருடம் வெளிநாட்டு பயணிகள் வருகை தருவார்கள்.

News July 10, 2024

காங்கிரஸ் சார்பில் நாளை போராட்டம் 

image

தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து நாளை தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சுரண்டை ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதில் அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர, பேரூர் தலைவர்கள் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

News July 10, 2024

ரவுடிகள் பட்டியல் தயார்: எஸ்.பி

image

தென்காசி மாவட்டத்தில் போலீசார் தயாரித்த ரவுடி பட்டியலில் 250 ரவுடிகளில் 150 பேர் சிறைகளிலும், 100 பேர் வெளியிலும் உள்ளனர். இவர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதம் உள்ள 100 ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், இவர்களுக்கு உதவி செய்தாலோ,  அடைக்கலம் கொடுத்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று எஸ்.பி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

சாமானியன் படத்தின் 50ஆவது நாள் கொண்டாட்டம்

image

ஆலங்குளம் தியேட்டரில் நேற்று சாமானியனின் திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில், படக்குழுவினருக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கருணாகரராஜ், வைகுண்டராஜ் ஆகியோர் கேடயம் வழங்கினர். இதுகுறித்து ராமராஜன் பேசுகையில், இந்த 50ஆவது நாளில் படம் வெற்றிகரமாக ஓடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது. இதற்காக நான் கிராம மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் .

News July 10, 2024

தென்காசி: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று(ஜூலை 10) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News July 9, 2024

தென்காசி மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் மற்றும் பிற நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 9, 2024

27 எஸ்ஐக்கள் மாற்றம்: எஸ்.பி உத்தரவு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இன்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 27 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் அந்தந்த காவல் நிலையத்தில் பொறுப்பெடுத்து அறிக்கையை அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

பேச்சுப் போட்டி: தென்காசி ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 19ஆம் தேதி, மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடக்கும் இந்தப் பேச்சு போட்டிகள், தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில், மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெறுமாறு ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டார்.

News July 9, 2024

சிறுவர் மன்றத்திற்கு ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டம் ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜவகர் சிறுவர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 5 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு வார நாட்களில் கலை பயிற்சிகள் வழங்குதல், கலை திறமைகளை வெளிக் கொண்டு வருதல், கலைக் கல்வி வழங்குதல் ஆகியன பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இன்று கலெக்டர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!