India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி, மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள ஆர்சி நடுநிலைப் பள்ளியில் காலை மற்றும் மதிய உணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாணவ, மாணவிகளை அழைத்து குறைகளை கேட்டு ஆசிரியர் பாடம் நடத்தும் நிகழ்வையும் கண்டு ரசித்தார்.
தென்காசி மாவட்டம் கடையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் விவசாய சேவை நிலையத்தில் நாளை(13.7.24) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் விவசாயிகளுக்கு கால்நடை தீவன விற்பனையை தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து மாவட்டம் நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) வரை தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்காசி, குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலம் ஆகும். இக்காலங்களில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் ஆனால், தற்போது வரை குற்றால அருவிகளில் சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போது பெய்யும் மழையால், தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் சில நாட்களாக மழை குறைந்ததால், தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை சுதா கருத்தரிப்பு மையம் சார்பில், குழந்தையின்மை, மகளிர் நலம் மற்றும் கர்ப்பப்பை சிகிச்சைகளுக்கான மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. வரும் ஜூலை 21ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுரண்டை – பாவூர்சத்திரம் சாலையில் உள்ள மாரிஸ் மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
உலக யோகா தினத்தை முன்னிட்டு, மும்பை நோவா யோகா சங்கமும், இந்திய ஹத யோகா ஃபெடரேசனும் இணைந்து சர்வதேச யோகா போட்டியும், இந்திய யோகா அணி தேர்வு போட்டியும் நடத்தினர். இதில் கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் சவுமித்ரன், 2ஆம் இடம் பிடித்து இந்திய யோகா அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவரை, பள்ளி நிர்வாகம் சார்பில் நேற்று பாராட்டியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், நேற்று ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவிற்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் எனவும், 82% வாக்குப்பதிவை பார்க்கும்போது திமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செங்கோட்டையில் இருந்து தாம்பரம் செல்லும் அதிவிரைவு ரயில் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். மருமார்கமாக, ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் விழுப்புரம் – செங்கோட்டை இடையே மட்டும் இயக்கப்படும்.
சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா இன்று தென்னக ரயில்வே கூடுதல் மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அதில் தென்காசி, சங்கரன்கோவில் வழியாக செல்லும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பது உட்பட தென்காசி பகுதியின் கோரிக்கைகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளரிடம் கோரிக்கை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.