India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆலங்குளத்தில் உள்ள காமராஜரின் சிலைக்கு ஹரிநாடார் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார். அதன்பிறகு அவர் தனது புதிய அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் போட்டியிட்டு 3ம் இடம் பிடித்த நிலையில், தற்போது நாடார் சமுதாயத்தினரின் வாக்குகளை குறிவைத்து அவர் இந்த அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார்.
தென்காசி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சுரண்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கியது. விடிய விடிய மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. சாலைகளில் மழை நீர்பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று செங்குந்தர் சமுதாய மண்டகப்படிக்கு சங்கரன்கோவிலுக்கு ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா வருகை தந்தார். அவருக்கு செங்குந்தர் சமுதாய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் பட்டிமன்ற பேச்சாளர் சந்தனகுமார் ,வேங்கை சந்திரசேகரன் திமுக சொற்பொழிவாளர் வேங்கை சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகளின் இன்றைய(ஜூலை 14) நிலவரம்(கிலோவில்), கத்தரிக்காய் ரூ.65, தக்காளி ரூ.50, வெண்டைக்காய் ரூ.40, புடலைங்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.40 பாகக்காய் ரூ.40, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.120, சின்ன வெங்காயம் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.40, இஞ்சி ரூ.160 மற்றும் மாங்காய் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் நேற்று தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று அனைத்து உட்கோட்ட காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினருக்கு வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் துப்பாக்கிகளை கையாளும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.
தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. தென்காசி இசக்கி வித்தியாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தை கலெக்டர் கமல் கிஷோர் ஆய்வு செய்தார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று(13.7.24) இரவு நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசியில் நேற்று பெய்த மழையால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்காசி நகர திமுக சார்பில் தென்காசி டிஎஸ்பி அலுவலகத்தில் திமுக தலைவர்கள் மீது அவதூறு பரப்பி வரும் நாதக தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று நகர செயலாளர் சாதிர் தலைமையில் தென்காசி டிஎஸ்பியிடம் மனு வழங்கினர். இதில், நகர நிர்வாகிகள், அவைத்தலைவர் பாலகிருஷ்ணன் துணைச்செயலாளர்கள், ராம்துரை, பால்ராஜ் பொருளாளர் ஷேக்பரீத், மாவட்ட பிரதிநிதி மைதீன் பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், பழைய குற்றாலம் வனப்பகுதியில் மழையின் தாக்கம் குறைந்ததால், அருவியில் நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காலை 6.30 மணிமுதல் அனுமதி அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா நேற்று அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் பள்ளி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வழக்கம் போல் 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி முழு வேலை நாள் எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு, இன்று தென்காசி மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.