Tenkasi

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

சசிகலாவின் இன்றைய பயணம்

image

அதிமுக தொண்டர்களை ஒண்றிணைக்கும் முயற்சியில், சசிகலா இன்று தென்காசியில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கிறார். இன்று, மாலை 3 மணி முதல், காசிதமஜர்புரம், இலஞ்சி, தென்காசி, கீழப்புலியூர், தமைப்பாட்டாக்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம், திருச்சிற்றம்பைம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சுரண்டை, வீராணம், துவரங்காடு, வி.கே.புதூர், வெள்ளக்கால், ஊத்துமலை ஆகிய பகுதிகளில் மக்களை சந்திக்க உள்ளார்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பா ர்க்கப்படுகிறது.

News July 17, 2024

தென்காசிக்கு வந்த சசிகலா: உற்சாக வரவேற்பு

image

அதிமுக தொண்டர்களை இணைக்கும் முயற்சியில், வி.கே.சசிகலா அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக நேற்றிரவு 11.30 மணிக்கு தென்காசிக்கு வந்தார். கொடி குறிச்சி இ.விலக்கு பகுதிக்கு வந்த அவருக்கு, அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று மாலை 4 மணிக்கு, தென்காசி மாவட்ட காசி மேஜர் புரத்திலிருந்து முதல்கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். தென்காசியில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

News July 17, 2024

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செய்திகளை பரப்ப வேண்டாம்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இன்று(ஜூலை 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் வரும் ஒரு செய்தியை அதன் உண்மைத் தன்மையை அறியாமல் யாரும் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளார். அவ்வாறு பகிரப்படும் செய்தியால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்குமாறும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

News July 16, 2024

பெண்ணின் கால்களில் எரிய அரசுப் பேருந்து

image

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் மலையராமபுரம், ஆரியங்காவூர், கல்லூரணி, செல்வ விநாயகபுரம் வழியாக செல்கிறது. இந்நிலையில் இவ்வழியாக இன்று 16ம் தேதி அதிவேகமாக பைக்கில் சென்ற 33 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதி அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அப்பெண்ணின் கால்களில் பேருந்தின் சக்கரம் ஏறியதால் 2 கால்களும் முறிந்தன.

News July 16, 2024

இன்றிரவு தென்காசிக்கு வரும் சசிகலா

image

தமிழகத்தில் அதிமுகவை மீட்கும் முயற்சியில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பதற்காக சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நாளை முதல் தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் சசிகலா, இன்று (ஜூலை 16) இரவு தென்காசிக்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டுக்கு, குத்துக்கல்வலசை பகுதியில் அதிமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க உள்ளனர். அவர் குற்றாலத்தில் தங்குகிறார்.

News July 16, 2024

20 ஆம் நூற்றாண்டு ஊர்க்கிணறு கல்வெட்டு கண்டுபிடிப்பு

image

தென்காசி அருகே நன்னகரத்தில் 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கொல்லம் ஆண்டு 1081 சித்திரை மாதம் 18ஆம் தேதி பொறிக்கப்பட்டது. இதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1906 மே 1 ஆகும். கல்வெட்டின் தொடக்கத்தில் சூலம் பொறிக்கப்பட்டுள்ளது. தென்காசி கேரளாவிற்கு அருகே கல்வெட்டு மலையாளம் கொல்லம் ஆண்டை குறிக்கிறது என்றார்.

News July 15, 2024

காலை சிற்றுண்டி திட்டத்தில் 23,028 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

image

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இட்டு முதல் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் 354 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 23,028 மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத்தை மத்தளம்பாறை ஊராட்சி விவேகானந்தா நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் இன்று 15-ம் தேதி துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் காலை சிற்றுண்டியை சாப்பிட்டார்.

News July 15, 2024

ராமநதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

image

தென்காசி மாவட்டம் ராமநதி அணை நீர்மட்டம் இன்று பகல் 2 மணி நிலவரப்படி 79 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 300 கன அடி நீர்வரத்து உள்ளது. மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, அணை நீர்மட்டம் 82 அடியானால், அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் வாய்ப்புள்ளது. இதனால், ஆற்றங்கரையோர உள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அபாயம் விடப்பட்டுள்ளது.

error: Content is protected !!