Tenkasi

News July 18, 2024

சசிகலாவுக்கு முத்தம் கொடுத்த தொண்டர்

image

அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் வகையில், தென்காசி மாவட்ட பகுதியில் நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சுந்தரபாண்டியபுரம் அடுத்த திருச்சிற்றம்பலம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள அதிமுக பெண் நிர்வாகியின் வீட்டிற்கு சசிகலா சென்றார். அப்போது பெண் தொண்டர், சசிகலாவுக்கு முத்தம் கொடுத்து வரவேற்றார். இது தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News July 18, 2024

தென்காசியில் நாளை வேலைவாய்ப்பு

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஜூலை 19) குத்துக்கல்வலசையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இதில், தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். தகுதியானவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

மொரிசியஸ் நாட்டில் சிக்கியவர்களை மீட்க வேண்டும்

image

சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த 12 பேர், மொரிசியஸ் நாட்டில் வேலைக்கு சென்றனர். அங்கு கம்பெனி அதிகாரி வீட்டில் வேலைக்கு வற்புறுத்துவதாகவும், அதனை செய்ய மறுத்தால் மிரட்டப்படுவதாகவும் காணொளி வாயிலாக புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, மாவட்ட ஆட்சியர் மற்றும் வெளி உறவு துறை செயலாளர் ஆகியோருக்கு இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

வாகனங்கள் ஏலம்: எஸ்.பி. தகவல்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு மூன்று சக்கர வாகனம், 63 இருசக்கர வாகனங்கள் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி தென்காசியில் உள்ள ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படுகிறது. முன்கூட்டியே டோக்கன் பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

News July 18, 2024

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு பேருந்து?

image

தென்காசியில் இருந்து சங்கரன்கோவில் வரை செல்லும் வழித்தடத்தில் புதிதாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த தடத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்தில் 35 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் இந்த இடத்தில் இயங்கும் புதிய பேருந்தில் திடீரென 8 ரூபாய் கட்டணம் உயர்த்தி பயணிகளிடம் ரூ.43 வசூலிக்கப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

News July 18, 2024

நாம் தமிழர் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

image

ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் திருமண மண்டபத்தில் வைத்து நெல்லை மக்களவைத் தொகுதி தேர்தலில், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை பாராட்டினார்.

News July 17, 2024

தென்காசியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிட்டத்தக்கது,

News July 17, 2024

லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட 12 டன் அரிசி

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் ரோடு பகுதியில், போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், ரேசன் அரிசி கொண்டு செல்வது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், மாட்டுத் தீவனம் வைத்து அதற்கிடையே ரேசன் அரிசி வைத்து கேரளத்திற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து ஓட்டுநரான நாகர்கோவிலை சேர்ந்த அசோகை பிடித்து 12 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

News July 17, 2024

முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டு தேர்வு எழுத தடை

image

தென்காசி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத் தேர்வு வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக தென்காசியில் உள்ள  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று ஆட்சியர் கமல் கிஷோர்  எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!