India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரையாறு அருகே உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு சிரமங்கள் இருக்கக் கூடாது என நெல்லை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு தெரிவித்துள்ளார். பக்தர்கள் கோவில் திருவிழாக்களில் 10 நாட்கள் தங்கி வழிபட, வனத்துறை அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் வாகனங்களில் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தென்காசியில் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, இன்று 3ஆவது நாளாக அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்க உள்ளார். இன்று, புளியங்குடி, முள்ளிகுளம், சங்கரன்கோவில், திருவேங்கடம், கரிசல்குளம், தேவர்குளம், திருமலாபுரம், குருக்கள்பட்டி, ஒத்தக்கடை, சண்முக நல்லூர், பணவடலிசத்திரம், வன்னிகோனந்தல் ஆகிய பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளார்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தென்காசி முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
புளியங்குடி – சிந்தாமணி
அருகே நேற்று (ஜூலை 19) மதியம் வாசுதேவநல்லூரில் இருந்து வந்த ரவி என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவானது வேகமாக சூறைக்காற்று வீசி நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பெண் ஒருவர் அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சங்கரன்கோவிலில் ஆடி தபசு திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று(ஜுலை 19) ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் வருகை தர உள்ளார். அவருக்கு சட்டமன்ற அலுவலகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ளுமாறு சங்கரன்கோவில் திமுக நகரச் செயலாளர் பிரகாஷ் இன்று கேட்டுக் கொண்டார்.
தென்காசி மாவட்டம் இலஞ்சி இராமசுவாமி பிள்ளை பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழா நேற்று ஜூலை 18ம் தேதி நடந்தது. ஆர்.பி. ஓவியக் கழக மாணவர்கள் ஓவிய ஆசிரியர் கணேசன் வழிகாட்டுதலின்படி இரண்டாயிரம் பேனாக்கள் வைத்து காமராஜரின் திருஉருவத்தை படமாக வரைந்து மாணவர்கள் சாதனை புரிந்தனர். இப்படத்தினை மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களை பாராட்டினார்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று, கடனா அணை பகுதியில் 10 மி.மீ மழையும், ராமநதி அணை பகுதியில் 9 மி.மீ மழையும், கருப்பா நதி பகுதியில் 1.50 மி.மீ மழையும், குண்டாறு பகுதியில் 4.20 மி.மீ மழையும், அடவிநயினார் பகுதியில் 7 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் தென்காசி பகுதியில் 12.20 மி.மீ மழையும், செங்கோட்டை பகுதியில் 2.20 மி.மீ மழையும், சங்கரன்கோவில் பகுதியில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தகவல்.
தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் மற்றும் கடையநல்லூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில், 2024ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகிற ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள தகுதியானவர்கள், நேரில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுக தொண்டர்களை இணைக்கும் முயற்சியில், சசிகலா நேற்று முதல் தென்காசியில் அரசியல் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 2ஆவது நாளான இன்று, பிரானூர் பார்டர், செங்கோட்டை, விஸ்வநாதபுரம், தேன்பொத்தை, கரிசல் குடியிருப்பு, குத்துக்கல்வலசை, இலத்தூர், அச்சன்புதூர், கடையநல்லூர், சொக்கம்பட்டி, இடைக்கால், நயினாகரம் ஆகிய இடங்களுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, வரும் 25ஆம் தேதி 8 -12ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள், நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் தென்காசியை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாக நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். 22ஆம் தேதிக்குள் 94860 41737 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.