Tenkasi

News July 21, 2024

பசுந்தீவனப் பயிரை பயிரிட ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டு பசுந்தீவன உற்பத்தினை அதிகரிக்க பழத்தோட்டங்களில் பசு தீவின பயிரை ஊடுபயிராக ஊக்கிவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

News July 21, 2024

வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு பாராட்டு

image

தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ராணி ஸ்ரீகுமாரின் வெற்றிக்கு அயராது உழைத்த தோழமைக் கட்சி மாவட்ட கழக செயலாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுக்கும் எம்.பி நன்றி தெரிவித்தார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா எம்எல்ஏ இன்று நினைவு பரிசுகளை வழங்கினார்.

News July 20, 2024

போக்குவரத்து வழிகள் மாற்றம்

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாளை ஆடித்தபசு விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாளை முதல் மதுரை செல்லும் வாகனங்கள் நடுவகுறிச்சி வழியாகவும், நெல்லை செல்லும் வாகனங்கள் ஸ்டேட் பேங்க் சாலை வழியாகவும், கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை சங்கரன்கோவில் சாலையில் செல்ல அனுமதி இல்லை என காவல்துறை இன்று அறிவித்துள்ளது.

News July 20, 2024

ஒரு நாள் இலவச போட்டித் தேர்வுக்கு அழைப்பு

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புன்னையாபுரத்தில் போட்டி தேர்வு பயிற்சி மையம் சார்பாக ஐஏஎஸ், ஐ பிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆகும். எனவே, இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

News July 20, 2024

தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் LIFT வசதி

image

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை ரயில் நிலையம் மற்றும் தென்காசி ரயில் நிலையங்களில் மின்தூக்கிகள்(LIFT) வசதி அமைக்கப்பட்டு வருகிறது. முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் படிகளில் ஏறி நடைமேடைகளுக்கு செல்ல சிரமப்பபட்டு வந்த நிலையில் வசதிக்காக தென்னக ரயில்வே இந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் இவை பயன்பாட்டிற்கு வரும் என தகவல்.

News July 20, 2024

தென்காசி இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

இந்திய விமானப்படையில் அக்னி வீர் வாயு ஆள் சேர்ப்பிற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வானது வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்த விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதள வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News July 20, 2024

மீன்பிடி உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்

image

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 2023-24 ஆம் ஆண்டு மாநில நிதியின் கீழ் உள்நாட்டு மீனவர்களின் மீன் திறனை மேம்படுத்திட 20 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள் 50% மானியத்தில் 3 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று வழங்கினார். இதில் கலெக்டர் கமல் கிஷோர், எம்எல்ஏ ராஜா, எம்பி ராணி ஸ்ரீகுமார் பலர் கலந்து கொண்டனர்.

News July 20, 2024

முன்னாள் அமைச்சருக்கு முதல் மரியாதை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் கோமதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்ட விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பரிவட்டத்துடன் முதல் மரியாதை செய்யப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 19, 2024

தேரோட்ட நிகழ்ச்சி துவக்கி வைப்பு

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண கோவில் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு தேரின் வடத்தினை இழுத்து தேரோட்டத்தை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News July 19, 2024

ஆட்சியரக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம்

image

தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூலம் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006, விதிகள் 2011 நடைமுறைப்படுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரக கூட்ட அரங்கில் வைத்து இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!