India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண்மை துறை இணைந்து கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச ஆறு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று 22ம் தேதி முதல் 27ஆம் தேதி வரை வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 9443962433 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொ) கனகம்மாள் இன்று கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவதற்கான நேரடி நியமன போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 644 பேர் விண்ணப்பித்திருந்தனர். 2 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 617 பேர் எழுதினர். 27 பேர் தேர்வி எழுத வரவில்லை.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக, ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 13.8 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் அமைப்பதற்கு 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் மண்டல இணை இயக்குனர் ஆகியோரை நேரில் அணுகி விண்ணப்பங்களை பெற்று பயன் பெறலாம் என இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவிலில் சங்கரநாராயணர் ஆடி தபசு திருவிழா, இன்று மாலை வெகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவதற்காக, 150 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், நகராட்சி சார்பில் சங்கரன்கோவிலில் 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி சங்கரன்கோவிலில் 1000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தவசுக் காட்சி இன்று (ஜூலை 21) மாலை நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தா்கள் கூடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோரது மேற்பாா்வையில் 1000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ஊரக வளர்ச்சி முகமை பழைய அலுவலகத்தில் நேரிலோ அஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே புங்கம்பட்டியில் மாஸ் மேக்கர் கைப்பந்து கழகம் சார்பில் இன்று 21ஆம் தேதி கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதனை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தொடங்கி வைக்க வருவதாக கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.