India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பலத்த எதிர்பார்ப்புகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தென்காசி மாவட்டத்தில் வாசுதேவன் பகுதியில் அதிகளவில் கரும்பு, சுரண்டை, கடயநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் நெல் விளைவதால் அங்கு கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும். அதனை சேமித்து வைக்க சேமிப்பு கிட்டங்கி அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என தென்காசி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும், இயற்கை வளங்கள் நிறைந்த தென்காசி மாவட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும். அரசு மருத்துவமனை, சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். பொதிகை மலையில் விளையும் அரியவகை மூலிகைக்காக அப்பகுதியில் ஆயுர் வேத மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க அறிவிப்பு வெளியாகுமா என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென்காசி தொகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் மாம்பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அப்பகுதியில் மாம்பழச்சாறு தொழிற்சாலை அமைக்க வேண்டும். மனித விலங்கு மோதலை தடுக்க வேண்டும்.அதன்மூலம் ஏற்படும் பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை வேட்டையாட விதிக்கப்பட்ட தடையை நீக்க அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்காசி உழவர்சந்தையில் இன்றைய (ஜூலை.23) காய்கறிகளின் விலை நிலவரம். கத்தரிக்காய் ரூ.65, தக்காளி ரூ.75, வெண்டைக்காய் ரூ.50, புடலைங்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ. 40, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.12, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.120, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.45, இஞ்சி ரூ.160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாரணாபுரம் , கரிவலம் வத்தநல்லூர் பகுதியில் இன்று(ஜூலை.23) மதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், பனையூர், குவளைக்கண்ணி, இடையான்குளம், காரிசாத்தான், தாருகாபுரம், சுப்பிரமணியபுரம், நாரணாபுரம், கரிவலம் வத்தநல்லூர் பகுதியில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற என்எம்எம்எஸ் பயிற்சி வகுப்பில் மாதிரிதேர்வு வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்றது. மாதிரி தேர்வில் மதிப்பெண்கள் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பயிற்சியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டு அரங்கில் வைத்து இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் கள்ளச்சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நாள்தோறும் அதிகாரிகள் அனைத்து பகுதிகள் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கள்ள சாராயம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உத்தரவிட்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார் மகளிர் உரிமைத் தொகை கோரி பெருவாரியான மனுக்கள் பெறப்பட்டன.
தென்காசி மாவட்ட ஆட்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய உற்பத்தி பொருட்களான கதர் ரகங்கள், கிராமப் பொருட்கள் மற்றும் பனைவாரிய பொருட்களின் கண்காட்சி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கதர் வாரிய உற்பத்தி பொருட்களின் விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பொருட்கள் விற்பனை நடைபெற்றது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று (ஜூலை 22) இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.