India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பேருந்து நிலையம் முன்பாக தென்காசி சைபர் பிரிவு மற்றும் ஸ்ரீ கண்ணா கல்வி குழுமம் இணைந்து சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு மற்றும் பேரணி நிகழ்ச்சி இன்று (அக்.22) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் துவங்கி வைக்க உள்ளார். இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சுரண்டையில் இயங்கி வரும் தனியார் மதுக்கடையை மூட வலியுறுத்தி தேமுதிக சார்பாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் தேமுதிக நிர்வாகிகள் கருப்பு நிலா கணேசன் தென்காசி நகர செயலாளர், மகேந்திரன்நகர துணை செயலாளர் நயினார், ரமேஷ் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார் இன்று (அக்.21) தென்னக இரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில்; தீபாவளி பண்டிகை முடிந்து ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியறையில் கேரள மாநிலத்திற்கு அளவுக்கு அதிகமாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை கண்டித்து வரும் 23ஆம் தேதி இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த சமாதான பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.21) நடந்தது. அதில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் ஏராளமான தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் தனியார் பள்ளி அருகே உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் பசு மாட்டை அதிகாலையில் சிறுத்தை ஒன்று அடித்து கொன்று போட்டுச் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பவர் தனது தந்தையை 2016ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குற்றவாளி டேவிட் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமாக ரூ.2,000 விதித்து நீதிபதி மனோஜ் குமார் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
கோவை, திருப்பூர் தொழில் நகரங்களில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் நலன் கருதி கோவை, நெல்லை, கரூர் தென்காசி வழியாக இரு மார்க்கங்களிலும் தீபாவளி சிறப்பு ரயில் இயக்க பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று(அக்.,20) ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலக்கடையநல்லூரை சேர்ந்த மணிகண்டன் பைக்கில் செல்லும்போது எதிரேவந்த வாகனம் மோதியதில் தலையில் காயமடைந்து தென்காசி மருத்துவமனையில் உயிரிழந்தார். கே.ஆலங்குளம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி முத்துலட்சுமி கார் மோதி பலியானார். சிவகிரியிலும் வாகனம் மோதி தளவாய் என்பவர் சம்பவ இடத்தில் பலியானார்.
சுரண்டை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று(அக்.,20) நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ராமத்திலகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட நகராட்சி தலைவர் வள்ளி முருகன் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் அதிகமாக விதிக்கப்படும் என எச்சரித்தார்.
அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தடுத்து நிறுத்த வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி போராட்டம் அறிவித்திருந்த நிலையில், 3ஆவது முறையாக இன்று(அக்.,21) மாலை 4 மணிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(DRO) தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இயற்கை வள பாதுகாப்புச் சங்க பொதுச்செயலாளர் ஜமீன் கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.