Tenkasi

News July 31, 2024

தமிழ்நாட்டில் மீண்டும் ‘கள்’? (2/2)

image

பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ உற்பத்தி செய்யப்படும். குறிப்பாக பனை மரங்கள் நிறைந்து காணப்படும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் சிவகங்கையில் கள் அதிகளவில் இறக்கப்பட்டது. கள்ளச்சராய பலி & ‘TASMAC’ மதுவின் தாக்கத்தை காட்டிலும் ‘கள்’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருத்தும் நிலவுகிறது. மீண்டும் ‘கள்’ விற்பனைக்கு வருவது குறித்த உங்கள் கருத்து என்ன?

News July 31, 2024

தென்காசி உழவர் சந்தை விலை நிலவரம்

image

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தையில்  காய்கறிகளின் இன்றைய(31ம் தேதி) விலை நிலவரம்: (ஒரு கிலோ) கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.80, வெண்டைக்காய் ரூ.60, புடலை ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.20, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.100, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.50க்கும் விற்பனை.

News July 31, 2024

ஆட்சியகரகத்தில் மாவட்ட கல்வி ஆய்வுக் கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று (ஜூலை 30) மாவட்ட கல்வி ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா மற்றும் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு கல்வி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

News July 30, 2024

Way2News எதிரொலி – அதிகாரிகள் நடவடிக்கை

image

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகே மெயின் ரோட்டில் குடிநீருக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிவடையாமல் பள்ளம் மூடாமலே கிடந்தது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக Way2News-ல் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக இன்று (ஜூலை 30) குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்தனர்.

News July 30, 2024

ராம நதி கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ராம நதி அணை உள்ளது .தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் ராமநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை தற்போது அதன் முழு கொள்ளளவான 84 அடியை எட்ட உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட ஆட்சியர் கமல் இன்று கிஷோர் தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

குண்டாறு பகுதியில் 38.8 மி.மீட்டர் மழை பதிவு

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணையில் 38.8 மி.மீட்டர் மழை, அடவிநயினார் அணை பகுதியில் 16 மி.மீட்டர், இராமநதி அணைப்பகுதியில் 10 மி.மீட்டர், கடனாநதி அணைப்பகுதியில் 2 மி.மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

News July 30, 2024

தென்காசி உழவர் சந்தை நிலவரம்

image

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய(ஜூலை 30) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.80, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.15, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.100, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.50க்கும் விற்பனை.

News July 30, 2024

தென்காசியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்திலும் இன்று(ஜூலை 30) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் போகும்போது முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துட்டு போங்க மக்களே!

News July 29, 2024

75 ஆவது நாளை கடந்து ஓடும் திரைப்படம்

image

ஆலங்குளம் tpvமல்டிபிளக்ஸ் திரையரங்கில் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த சாமானியன் திரைப்படம், 75 வது நாளாக வெற்றிகரமாக ஓடுவதை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு இன்று அவரது ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திரைப்பட இயக்குனர் ராகேஷ், மன்ற தலைவர் எம் எஸ் சுப்பையா மற்றும் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 29, 2024

தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை தென்காசி, திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!