India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ நேற்று விடுத்துள்ள அறிக்கையில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில் அனைத்து திமுக நிர்வாகிகள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், தென்காசி நண்பர்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குற்றால மெயின், ஐந்தருவி, பழைய அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குவிந்து வருகின்றனர். மேலும், ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டு அரங்கில் வைத்து நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். இந்த மாதத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு கல்வி கடன் முகாமில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கல்வி கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
தென்காசி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர். சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் இன்று மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குற்ற செயல்கள் நடைபெறா வண்ணம் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் திட்டமில்லா பகுதியில் 2011 க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 31.1.25 வரை 6 மாத காலம் நீடிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி www.tcp.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.
தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகளின் இன்றைய (ஆக.3) விலை நிலவரம் கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.40, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.15, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.100, சின்ன வெங்காயம் ரூ.40, இஞ்சி ரூ.160, மாங்காய் ரூ.60 க்கு விற்பனையாகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் மலையிடப்பகுதியில் அமைந்துள்ள வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனை பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மீன், இறைச்சி, காய்கறி, மார்க்கெட், பழக்கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் எடைகற்கள் வைத்திருக்காத 17 கடைகள் என 37 வணிக நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பேருந்து நிலையங்களில் 9 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு மொத்தம் 47 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்தையனார் கோவிலில் வரும் 4 ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு முன்னதாகவே பக்தர்கள் கோவில் பகுதியில் குடில்கள் அமைத்து தங்க அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.