Tenkasi

News August 14, 2024

தென்காசியில் டாஸ்மாக் கடைகள் மூடல்

image

தென்காசி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்களுக்கு அனைத்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(ஆக.,15)மூடப்பட்டிருக்கும். இந்நிலையில், நாளை அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தென்காசி ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.,14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

News August 14, 2024

தென்காசி உழவர் சந்தையில் இன்றைய நிலவரம்

image

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் இன்றைய(ஆக.,14) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ.70, தக்காளி ரூ.15, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.15, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.80, சின்ன வெங்காயம் ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.50, இஞ்சி ரூ.160, கேரட் ரூ.120க்கு விற்பனை.

News August 14, 2024

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரிந்த கார்

image

அவிநாசியை சேர்ந்த செரிப் என்பவர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆம்னியில் இன்று(ஆக.,14) தென்காசி வருகை தந்துள்ளார். தென்காசி புதிய நீதிமன்றம் அருகே இன்று அதிகாலை வந்தபோது திடீரென ஆம்னி வேனில் தீப்பிடித்து, தொடர்ந்து மளமளவென எரிந்துள்ளது. தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் பிரதீப்குமார், சிறப்பு நிலை அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

News August 14, 2024

போதையில் உறங்கிய உதவி இயக்குநரால் அதிர்ச்சி

image

ஆலங்குளம் வேளாண்துறை அலுவலக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி இயக்குநராக புளியங்குடியை சேர்ந்த அறிவழகன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று(ஆக.,13) இங்கு சென்ற விவசாயிகள், அறிவழகன் போதையில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது பையில் மது பாட்டில்கள் இருந்ததை கண்டு முகம் சுழித்தபடி திரும்பினர்.

News August 13, 2024

தென்காசியில் பொதுக்குழு கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் பொதுக்குழு கூட்டம் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் வைத்து வருகிற 15ஆம் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 13, 2024

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

image

திருநெல்வேலி, அம்பை, கடையம், தென்காசி வழியாக பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு தூங்கும் வசதி பெட்டி மற்றும் மூன்று பொது பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாளை (ஆக.14) முதல் இந்த ரயிலில் நான்கு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. இந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மறுநாள் (ஆக.15) முதல் தூத்துக்குடி வரை இயக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

News August 13, 2024

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இசக்கி ராஜா தேவர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிறு குறு தொழில் முனைவோரின் தொழில்களை தொடர்ந்து நடத்திட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக இன்று (ஆக.13) வந்திருந்தார். இதன் காரணமாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன.

News August 13, 2024

எம்.எஸ்.சி படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

image

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் ஒப்புயர்வு மையத்தில் அனைத்து அறிவியல் பட்டதாரி மாணவர்களுக்காக நடைபெறும் இரண்டு வருடம் மற்றும் ஐந்து வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி சுற்றுச்சூழல் அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் இன்னும் சில இடங்கள் இருப்பதாக மையத்தின் பேராசிரியர் செந்தில்நாதன் இன்று (ஆக.13) தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

நாய்கள் கண்காட்சிக்கு பதிவு செய்துகொள்ள அழைப்பு

image

தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(ஆக.,13) வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும்16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 17ஆம் தேதி மதியம் 11 மணி முதல் 3 மணி வரை நாய்கள் கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில் கலந்துகொள்ள விரும்பும் நாய்களின் உரிமையாளர்கள், நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று காலை 9 மணி முதல் மதியம் 11 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். SHARE IT.

error: Content is protected !!