India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (ஆக.20) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு கடையம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்படுகிறது. இதில் தென்காசி எம்எல்ஏ பழனி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ஒண்டிவீரர் நினைவு தினம் நாளை (ஆக.19) அனுசரிக்கப்படுகிறது. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வாசுதேவநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள 20 டாஸ்மாக் கடைகள் நாளை ஒரு நாள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா வரும் 23ஆம் அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையடுத்து அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(ஆக.,19) தெரிவித்துள்ளார்.
தென்காசி புளியங்குடி அருகே உள்ள மலையடிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இசக்கித்துரை மனைவி பாப்பம்மாள்(55). இவர் இன்று(ஆக.,19) காலை குடிதண்ணீர் பிடிப்பதற்காக மின்மோட்டாரின் சுவிட்சசை தொட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவலறிந்த புளியங்குடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பாப்பம்மாள் உடல் உடற்கூறு ஆய்விற்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தென்றல் தவழும் தென்காசியின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் நடைபெறும் ‘சாரல் திருவிழா-2024’ல் இன்று(ஆக.,19) மாராத்தான் போட்டி தொடங்கியது. போட்டியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று(ஆக.,18) சங்கரன்கோவில் மாவட்ட திமுக அலுவலகத்தில் மா.செ. ராஜா MLA தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மருத்துவ அணி மாநில து.செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட பொருளாளர் சரவணன் & நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்துவது குறித்து ஆலோசித்ததாக தகவல்.
குற்றாலத்தில் சாரல் திருவிழா மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (ஆக.18) காலை முதல் கலைவாணர் கலை அரங்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆணழகன் போட்டி, கோலப் போட்டி, யோகா, நடனம், பரதநாட்டியம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, தோல் பாவை கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தனது குடும்பத்தினரோடு மக்களோடு மக்களாக இருந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் குற்றால சாரல் விழா கலைவாணர் கலையரங்கத்தில் இன்று (ஆக.18) நடைபெற்றது. இங்கு நடைபெற்ற வலு தூக்குதல், பளு தூக்குதல் (ம) ஆணழகன் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் 309வது பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் ஒண்டிவீரன் 253வது வீரவணக்க நிகழ்ச்சி செப்.1ம் நடைபெற உள்ளது. இதனால் தென்காசி மாவட்டம் முழுமைக்கும் ஆக.18ம் தேதி மாலை 6 மணி முதல் 21 காலை 10 மணி வரை மற்றும் ஆக.30 மாலை 6 மணி முதல் செப்.2 காலை 10 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வரும் 23ம் தேதி சங்கரன்கோவில் கோயில் குடமுழுக்கு நடைபெறுகிறது. புனரமைப்பு பணிகளை செய்த பின்பே குடமுழுக்கு நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, குடமுழுக்கு நடத்த தடையில்லை. நிபுணர் குழு & மனுதாரர் தரப்பில் 28ல் ஆய்வு செய்ய வேண்டும். விசாரணை செப்.2 ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.