Tenkasi

News August 22, 2024

இன்று அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது

image

நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாள் முகம் இன்று(ஆக.22) மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் பள்ளிகள் மற்றும் தனியார் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சுகாதார செவிலியர்கள் ஆய்வாளர்கள் தலைமையில் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நேற்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக்கொண்டார்.

News August 21, 2024

எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் தலைமையில் இன்று பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

News August 21, 2024

தென்காசிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நியமனம்

image

தமிழகம் முழுவதும் இன்று 57 மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநிலை) தஞ்சை மாவட்டத்தில் பணிபுரிந்த கே.அமலா தங்கத்தாய் இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மாவட்ட கல்வி அலுவலராக (தனியார் பள்ளிகள்) குமரியில் பணிபுரிந்த செ.மாரிமுத்து இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

News August 21, 2024

தென்காசியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று(ஆக.,21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

News August 21, 2024

சங்கரன்கோவிலில் அமைச்சர், MP, கலெக்டர், SP ஆய்வு

image

சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநாராயணர் கோயில் குடமுழக்கு திருவிழா ஆக.,23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று(ஆக.,20) விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தென்காசி கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி சீனிவாசன், தென்காசி எம்பி ராணி ஸ்ரீ குமார், அறங்காவலர் குழு தலைவர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

News August 21, 2024

கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம் ஆய்வு

image

சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநாராயணர் கோவில் குடமுழக்கு திருவிழா வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், எஸ்பி சீனிவாசன் தென்காசி எம்பி ராணி ஸ்ரீ குமார், அறங்காவலர் குழு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

News August 21, 2024

செங்கல் சூளைகளை ஆய்வுசெய்த ஆட்சியர்

image

சிவகிரி பகுதியில் அனுமதியின்றி இயங்கி வரும் செங்கல் சூளைகளை கண்டறிந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக நேற்று  (ஆகஸ்ட் 20) தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா,
சிவகிரி தாசில்தார் ரவிக்குமார், ஆய்வாளர் சண்முக லட்சுமி மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 20, 2024

தென்காசியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலைக்கல்லூரியில் வருகிற 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலை நாடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்டஆட்சியர் இன்று கேட்டுக்கொண்டார்.

News August 20, 2024

அதிமுக சார்பில் ஒண்டிவீரன் நினைவு தினம்

image

நெற்கட்டும்செவல் பச்சேரியில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253வது வீரவணக்க நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.      இதில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன, மகளிரணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

News August 20, 2024

ஒண்டிவீரன் நினைவிடத்தில் அஞ்சலி

image

நெற்கட்டான்செவல் கிராமத்தில் அமைந்துள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில் இன்று அவரது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. நிகழ்வில், தமிழக வருவாய்துறை அமைச்சர் K.K.S.S.R ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் ராஜா MLA, ராணிஸ்ரீகுமார் MP, தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன்,
மாநில மருத்துவரணி செண்பக விநாயகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!