India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் மேலாம்பூரை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி தலைவர் வின்சென்ட். இவர் கடையத்தை தனி தாலுகாவாக அமைக்க கோரி கடந்த மாதம் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். அந்த மனுவிற்கு இன்று(செப்.,5) பதில் வந்துள்ள கடிதத்தில் கடையத்தை தலைமை இடமாக கொண்டு புதிய வட்டம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக கூடுதல் உதவியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் திமுக பொது உறுப்பினர் கூட்டம் வாசுதேவநல்லூரில் நேற்று(செப்.,4) நடைபெற்றது. அவைத் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜா MLA, ராணி ஸ்ரீகுமார் MP ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தொடர்ந்து MLA ராஜா பேசுகையில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றார்.
சுரண்டை நகராட்சி வள மீட்பு பூங்காவில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை தொழிற்சாலைக்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இதில் ஆணையாளர் ராம் திலகம் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் அறிவுறுத்தலுடன் சுரண்டை நகராட்சி பொருட்கள் மீட்பு அறையில் இருந்து 6.7 டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் 1.8 டன் பேப்பர் கழிவுகள் மறுசுழற்சிக்காக தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடையம் அருகே புங்கம்பட்டி ஸ்ரீ ராம நாராயண நாடார் நடுநிலைப் பள்ளியில் கடையம் வட்டாரம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட பொது மருத்துவ முகாம் இன்று(செப்.5) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கடையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பழனி குமார் கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு இன்று ஒரு விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் உங்களின் வாகனத்திற்கு காவல்துறையினர் அபராதம் விதித்தது போன்று போலியாக தற்போது E Challan மூலமாக மோசடி நடைபெற்று வருகின்றது. நீங்கள் இதேபோல் குறுஞ்செய்தி பெறப்பட்டால் அதில் வரும்
லிங்கை தொட வேண்டாம் என தென்காசி மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாவாநகரத்தை சேர்ந்த குமாரவேல் (45), கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய வல்லம் பகுதியை சேர்ந்த அருண் பாண்டியன் ஆகிய இரண்டு நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி சீனிவாசன் பரிந்துரைத்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இரண்டு நபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
தென்காசி மாவட்டத்தில் 8 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் கலைச் செல்வி, சண்முக சுந்தரம், ராஜா சிங், கணேசன் ஆகிய நான்கு பேரும், தொடக்க கல்வித் துறையில் மீனாட்சி, ஆக்னஸ் மேரி, ஹெலன் மேரி கிரிஸ்டிபாய், பரமேஸ்வரி ஆகிய நான்கு பேரும் நாளை சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருது வாங்கவுள்ளனர்.
கேரளாவின் பிரபலமான நடிகர்களுள் ஒருவரான மோகன்லால். தனது 18-வது வயதில் 1978-ஆம் ஆண்டு வெளியான திரனோட்டம் என்ற மலையாளத்திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து,மலையாளம், தமிழ், கன்னட மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் மோகன்லால் தனது 46 ஆண்டுகள் திரைப்பயணம் நிறைவடைந்து 47வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு தமிழக கேரள எல்லையில் உள்ள அச்சன்கோவில் ஐயப்பன்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 6ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தென்காசி மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 8ஆம் தேதி மாபெரும் கண் சிசிக்சை முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை, தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன், ஆலங்குளம் அரிமா சங்கம் மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 220ஆவது முகாமை நடத்துகிறது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அரிமா சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
Sorry, no posts matched your criteria.