India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நல வாரியத் திட்டத்தின் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் உறுப்பினராக சேர்வதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் டிச.3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(நவ.29) கேட்டுக்கொண்டார்.
தேவேந்திர குல வேளாளர் ஆதிதிராவிடர்(பறையர்) மக்களுக்கு 3 சதவீதம் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டெல்லியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி மாபெரும் கருத்தரங்கம் டிசம்பர் 6 ,7 ,8 ஆகிய தேதியில் நடக்கிறது. இதனை வரவேற்று புளியங்குடியில் இன்று(நவ.29) புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டிருந்த வாக்காளர் சேர்ப்பு, திருத்த முகாம் 28 நவம்பர் வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில், விண்ணப்பங்களுக்கான பரிசீலனை டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி 6 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயகிரியில் ஏற்கனவே இருந்த டாஸ்மாக் கடை அரசியல் கட்சிகள், பொதுமக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும் மது கடையை மூட வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் நேற்று(நவ.,28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக பேரூர் செயலாளர் சேவக பாண்டியன் தலைமையில், சிபிஐ நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், BSNL நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இந்த டவரில் பேட்டரி திருடுபோனது குறித்து மேலாளர் ராஜ் வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட விஜயலட்சுமி, மாடத்தி, கிருபா ஆகிய 3 பெண்களை போலீசார் நேற்று(நவ.,29) கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேல மெஞ்ஞானபுரத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு சாமுவேல் துரைபாண்டி(70) என்பவரை கொலை செய்த வழக்கில் மேல மெஞ்ஞானபுரம் ஏழுமலை(45) என்பவரை குற்றாலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நேற்று(நவ.,28) வந்தபோது, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி மனோஜ் குமார் தீர்ப்பளித்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று(நவ.27) பிறந்த மூன்று குழந்தைகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையிலான திமுகவினர் இணைந்து தங்க மோதிரம் அணிவித்தனர். இதில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு குமரி மண்டல தலைவரும், தென்காசி மாவட்ட தலைவருமான டிபிவி வைகுண்ட ராஜா இன்று(நவ.,28) வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் டிச.,11-ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்., கமிட்டி மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன் நேற்று(நவ.,27) வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட காங்., கமிட்டி தலைவருடன் இணைந்து செயல்பட்டு கிராம காங்., கமிட்டிகள் கட்டமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு கடையத்தை சேர்ந்த தமிழ்நாடு காங்., இளைஞரணி பொதுச்செயலாளர் மாரி குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.