India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட பகுதிகளில் நேற்று பல்வேறு இடங்களில் கன மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சிவகிரியில் 10 மில்லி மீட்டர் மழை, தென்காசியில் 8 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 20.20 மில்லி மீட்டர் ,ஆய்க்குடியில் 10.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று(டிச.,1) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், சோமவார 3வது திங்கள் கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் குற்றால அருவிகளுக்கு குளிக்க வரும் நபர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கவனமாக வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று(டிச.1) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், திங்கள் கிழமை சோமவார 3வது திங்கட்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் குற்றால அருவிகளுக்கு குளிக்க வரும் நபர்கள் மிக எச்சரிக்கையுடன் கவனத்துடன் வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் இன்று(டிச.1) இரவு 4 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரண்டு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தென்காசி மற்றும் ஆலங்குளம் புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ஜெயபால் பர்னபாஸ் தமிழ் இனியன் அறிவழகன் வெங்கடேஷ் ஆகியோர் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர உதவிக்கு 04633295455,9884042100,100, ஆகிய எண்கள் தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று(நவ.30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேவேந்திரகுல சமுதாயம் சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நேற்று(நவ.29) நடைபெற்றது. விழாவிற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் என்றார்.
தென்காசி மாவட்ட குற்றப்பதிவு துறையின் துணை கண்காணிப்பாளராக சாந்தமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்த நிலையில், தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என நேற்று(நவ.29) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி ஃபார்ம், டி ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க நவ.,30 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் டிச.,5 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே, 22 கிலோ கஞ்சா கடத்திய ராமச்சந்திரன் என்பவருக்கு பத்தாண்டு சிறையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் கட்ட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கட்ட தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 1 கிலோ கஞ்சா வைத்திருந்த மகேந்திரன் என்பருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம். கட்ட தவறினால் 2 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
தென்காசி உட்கோட்டத்துக்குட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் இன்று(நவ.29) இரவு 10 மணி முதல் நவ.30 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100
Sorry, no posts matched your criteria.