India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தை சார்ந்த அஜித்குமார்(29) கால்களில் வீக்கம் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு நேற்று முன்தினம்(டிச.,1) பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், சங்கரன்கோவில் இருந்து ஏறினார். இந்நிலையில், விழுப்புரத்தில் மாற்று ரயில் மூலம் ஏறி சென்றபோது மயக்கம் அடைந்து ரயிலில் உயிரிழந்தார். இது குறித்து எக்மோர் போலீசார் நேற்று காலை உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் தற்போது பிசான பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உரங்கள் தட்டுப்பாடு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, பாக்ட் நிறுவன விற்பனை பொது மேலாளர் ஜிதேந்திரகுமாரை தொடர்பு கொண்டு உரங்களை தட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்யுமாறு நேற்று கேட்டுக் கொண்டார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் 62 வணிக நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதோடு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், எடையளவு கருவிகளை பரிசோதனை செய்து வைக்குமாறும், தவறும் பட்சத்தில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருவள்ளுவன் நேற்று(டிச.,2) தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2024-2025 ஆண்டுக்கான, ரவி பருவம் நெற்பயிர்களுக்கு காப்பீட்டு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.534 ப்ரீமியம் செலுத்தி, பயிர்களுக்கான காப்பீடு செய்துகொள்ள தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பவர் 16 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் கொடுக்கப்படுகிறது.
தென்காசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் இன்று இரவு 10 மணி முதல் (டிச. 3) அதிகாலை 2 மணி வரையிலும், டிச.3 காலை 2 மணி முதல் 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கவும் அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 9884042100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மொத்தம் 621 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்தவையா என்பதை விசாரித்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட ஆட்சித்தலைவர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“மத்திய மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மூன்று மாத காலம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள் ஆகியோர் இலவச தையல் இயந்திரம் பெற்றிட திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு” கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண் தலைமையில் ஆய்வு கூட்டம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் சிறுபான்மை இன சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக்கொண்டார்.
மாநில மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், தென்காசி மாவட்ட பள்ளிகள் அளவில் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் காந்தி கிராமம் அறக்கட்டளை சாந்தி செவித்திறன் குன்றியோர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நேற்று(டிச.,1) நடைபெற்றன. போட்டியை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷ் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்குகிறார்.
தென்காசி மாவட்ட பகுதிகளில் நேற்று பல்வேறு இடங்களில் கன மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சிவகிரியில் 10 மில்லி மீட்டர் மழை, தென்காசியில் 8 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 20.20 மில்லி மீட்டர் ,ஆய்க்குடியில் 10.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.