Tenkasi

News November 1, 2024

தென்காசி, செங்கோட்டை, சுரண்டையில் நாளை மின் தடை

image

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் திருமலைக்குமாரசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் நாளை (நவ.02) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மின் விநியோக அலுவலகத்திற்குட்பட்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News November 1, 2024

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா?

image

செங்கோட்டையிலிருந்து 31ம் தேதி மாலை 6:20 மணியளவில் சென்னை நோக்கி 24 பெட்டிகளோடு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் கடைய நல்லூரை தாண்டி சென்று கொண்டிருந்த போது போக நல்லூர் காக்கநல்லூர் இடையே ரயிலின் தண்டவாளத்தில் 2 பாரங்கற்கள் இருப்பதைக் கண்ட ரயில் ஓட்டுநர் மாடசாமி உடனடியாக கொட்டும் மழையில் ரயிலை நிறுத்தி பாரங்கற்களை அகற்றி அங்கிருந்து ரயிலை இயக்கினார். இது  குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரிகின்றனர்.

News October 31, 2024

தீபாவளி பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

image

➤எளிதில்‌ தீப்பற்றும்‌ ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக்‌ கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம்‌, சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள்‌ வெடிக்கக்‌ கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப்‌ பயன்படுத்த வேண்டும்‌
➤ வாளியில்‌ தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்‌
➤ தீக்காயம்‌ ஏற்பட்டால்‌ சுயமாக மருந்துகளை எடுத்துக்‌ கொள்ளாமல்‌ மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்‌.
SHARE IT!

News October 30, 2024

முழு விவரத்துடன் பதிவு செய்த பின்னர் தங்க வைக்க வேண்டும்

image

தென்காசி மாவட்ட காவல்துறை நேற்று(அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலம் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் தங்கும் போது ஆதார் அட்டை முகவரியுடன் விடுதி உரிமையாளர்கள் முழு விவரத்துடன் வருகை பதிவேட்டில் பதிவு செய்த பின்னர் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News October 30, 2024

ஆலங்குளத்தில் துரித உணவு சாப்பிட்ட 10 பேருக்கு உடல் நலம் பாதிப்பு

image

ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள துரித உணவுக்கடையில் கடந்த வெள்ளிக்கிழமை சிலர் உணவு வாங்கி சாப்பிட்டனராம். அதில் 10க்கும் மேற்பட்டோர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுகாதாரத் துறையினரும் உணவுப் பாதுகாப்பு துறையினர் அந்த உணவகத்தை நேற்று ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.

News October 29, 2024

விழிப்புணர்வு வெளியிட்ட தென்காசி காவல்துறை

image

தென்காசி மாவட்ட காவல்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,“தீபாவளி முன்னிட்டு கூட்டணியில் பயன்படுத்தி உடைமைகள் திருடு போக வாய்ப்புள்ளது; எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்; பொருட்களை யாரேனும் தவறவிட்டிருந்தால் அதனை அருகில் உள்ள காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்; பட்டாசு கடைகள் அருகே செல்லும்போது தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 29, 2024

விடுதிகள் பதிவு செய்ய விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி ஆட்சியர் கமல்கிஷோர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தென்காசி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் போன்ற பதிவு செய்யப்படாமல் இயங்கும் இல்லங்கள் 1 மாத காலத்திற்குள் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

News October 29, 2024

தென்காசியில் நூலகர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வீடு தோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் நவம்பர் 10 ஆம் தேதிக்குள் தென்காசி மாவட்ட நூலக அலுவலகத்தில் நேரிலயோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், துணை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

News October 29, 2024

கோவில்களில் நகைகள் திருடிய வாலிபர் கைது

image

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கடையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிறு சிறு கோவில்களில் சமீப காலமாக அம்மன் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் காணாமல் போனது. இது குறித்து போலீசார் வழக்கு பதித்து விசாரித்து வந்த நிலையில், கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற கார்த்தி்க்கை இன்று கைது செய்தனர்.