Tenkasi

News September 14, 2025

தென்காசி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

image

தென்காசி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தென்காசி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News September 14, 2025

தென்காசி காசி விஸ்வநாதர் காண இந்த TIMEக்கு போங்க!

image

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் காலை 06.00 -12.00, பிற்பகல் 04.00 – 8.30 நடை திறந்திருக்கும்.
பூஜைகள் விபரம்.
1. திருவனந்தல் பூஜை – 06.00 மணி
2.சாயரட்சை பூஜை – 06.00 மணி
3.விளா பூஜை – 07.00 மணி
4.காலசந்தி பூஜை – 08.00 மணி
5.அர்த்தஜாம பூஜை – 08.30 மணி
6.உச்சிக்கால பூஜை – 12.00 மணி
தென்காசி மக்களே பூஜை நேரங்களை திட்டமிட்டு சென்று காசிவிஸ்வநாதரை மனமார தரிசியுங்க. SHARE பண்ணுங்க…

News September 14, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

News September 13, 2025

ஆலங்குளம் அருகே தவறான சிகிச்சையால் உயிரிழப்பு

image

அடைக்கலப்பட்டணத்தில் அமைந்துள்ள கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்ததாக எழுந்த புகாரின்பேரில் பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அனுமதியின்றி அந்த கிளினிக் செயல்பட்டதாக கூறி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா இன்று கிளினிக்கை பூட்டி சீல் வைத்தார்.

News September 13, 2025

தென்காசி: குளத்தில் இருந்து எடுக்கபடும் தண்ணீர்

image

தென்காசி, குத்துக்கல்வலசை ஊராட்சி அடவிநயினார் அணை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பொதுபணித்துறைக்கு சொந்தமான நெடுங்குளத்தில் 10க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் மூலம் வணிக பயன்பாட்டுக்குக்காக எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக சொல்லபடுகிறது. நிலத்தடி நீர் சீக்கிரம் வரண்டு விவசாய பயிர்களை காப்பாற்ற முடியாத சூழல் என விவசாயிகளின் வேதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 13, 2025

தென்காசி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

image

தென்காசி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 13, 2025

தென்காசி: “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ஆட்சியர் ஆய்வு

image

தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி, சிந்தாமணியில் நேற்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புளியங்குடி நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஆய்வு மேற்க்கொண்டார்.

News September 13, 2025

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவு

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் காரணமாக சீசன் குற்றாலம் பகுதிகளில் கலை கட்டியது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால் குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைந்தது.

News September 13, 2025

தென்காசி: உங்க நீதிமன்ற CASE நிலை என்ன??

image

தென்காசி மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல! இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News September 13, 2025

தென்காசி: செயின் பறிப்பில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி

image

நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள்(80) என்பவர் நேற்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து புகார் வந்த நிலையில் புளியங்குடி காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட சங்கரன்கோவிலைச் சேர்ந்த மதிவர்ணம்(34) என்ற நபரை கைது செய்தனர். இவர் ME(C.S) படித்தவர் ஆவார்.

error: Content is protected !!