Tenkasi

News May 21, 2024

தென்காசி அருகே இளம்பெண் விபரீத முடிவு 

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் இவரின் மனைவி உச்சிமாகாளி (36) .இவர் தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டதால் தீக்குளித்தார் .தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 21, 2024

அரசு கல்லூரிக்கு விண்ணப்பிக்க 24 ஆம் தேதி வரை நீட்டிப்பு

image

சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி முதல்வர் பொ ஜெயா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பிக்க இறுதி நாள் 20.05.2024 இல் இருந்தது 24.05.2024 ஆக நீட்டிப்பு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

News May 21, 2024

தென்காசி மாவட்டத்தில் ரெட் அலெர்ட் நீங்கியது

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அதி கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு ரெட் அலெர்ட் விடப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டன. மேலும் மீட்பு படைகளும் வரவழைக்கப்பட்டன. ஆனால் நேற்று(மே 20) மாவட்ட பகுதிகளில் கனமழை பெரிதாக இல்லை. இதனால் ரெட் அலர்ட் நீங்கி மஞ்சள் அலர்ட் தொடர்கிறது.

News May 21, 2024

தென்காசியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

image

தென்காசியில் இன்று(மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30 – 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News May 20, 2024

திருடர்கள் கைது போராட்டம் ரத்து அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார் பட்டியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் 22 ஆம் தேதி தென்பொதிகை வியாபாரிகள் சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. தொடர்ந்து நேற்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் நடைபெறுவதாக இருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவித்தார்.

News May 20, 2024

தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு!

image

தென்காசிக்கு நாளை (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தென்காசியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசியின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

தென்காசி:குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை தகவல்

image

தென்காசி மாவட்ட பகுதியில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது .மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மலை பெய்து வருவதால் இந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு துறையின் மூலம் அனைத்து செல்போன் எண்ணிற்கும் தற்போது குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

News May 20, 2024

தலைமை ஆசிரியர், முதல்வர்களுக்கு பிறந்த உத்தரவு

image

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இன்றும் நாளையும் நமது மாவட்டத்தில் ரெட் அலர்ட் அதிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பெயில் மற்றும் ஆப்சன்ட் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பிற்கு வர வேண்டாம் என மாணவர்களுக்கு தெரிவிக்கும் படி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கேட்டுக்கொண்டார்.

News May 20, 2024

தென்காசி: பழைய குற்றாலத்தில் மீண்டும் மழை

image

தென்காசி, பழைய குற்றாலம் பகுதியில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பழைய குற்றாலம் அருவி மற்றும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்கிறது. இதனால் மீண்டும் நீர் வரத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

News May 20, 2024

தென்காசி பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்

image

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஒட்டப்பட்ட போஸ்டரில் கீழப்பாவூர் மற்றும் ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவரின் முறைகேடுகள் அதிகாரிகள் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துகேட்பு கூட்டத்தில் முடிவு என்ன? தலைவரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டது.