Tenkasi

News January 24, 2025

புளியங்குடி பாலியல் தொல்லை வழக்கு: அரசு பஸ் டிரைவர் கைது

image

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொடர்புடைய போலீசார் ஒருவரை கைது செய்து மற்றொரு போலீசாரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மோகன்(50) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் புளியங்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக உள்ளார்.

News January 24, 2025

தென்காசியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் பேரணி

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,“இன்று (24.01.2025)
காலை 10.00 மணி அளவில்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தென்காசி இ.சி.ஈ. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் பேரணி நடக்கிறது; பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

குடியரசு தின விழா மாவட்ட வருவாய் அலுவலர் அறிக்கை

image

தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி ஞாயிறு காலை 8.10 மணிக்கு தென்காசி மாவட்டம், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே. கமல் கிஷோர், தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்” என தெரிவித்தார்.

News January 23, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியீடு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குடியரசு தினமான 26.1.2025 அன்று காலை 11 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டத்தில் கூட்ட பொருளாக கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். *SHARE IT*

News January 23, 2025

நீர்நிலை காப்பாளர் விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்காசி மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பை அங்கீகரித்து விருது வழங்கப்பட உள்ளது. விருதினை <>இங்கே Click செய்து <<>> ஜனவரி 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.•உங்கள் சமூக ஆர்வலர் நண்பர்களுக்கு பகிரவும்*

News January 23, 2025

தென்காசி வருகிறார் கனிமொழி எம்.பி.!

image

தென்காசி தெற்கு மாவட்ட பகுதியில் ஜன.29 அன்று புதிய திமுக அலுவலக கட்டடங்கள் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட 10 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொள்ளவுள்ளதாகவும், இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ளும் படியும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 23, 2025

தென்காசி வரும் கனிமொழி எம்பி – ஆலோசனை கூட்டம்

image

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜன.29-ல் தென்காசி தெற்கு மாவட்டம் வருகை தர உள்ளார் . இது தொடர்பாக மாவட்ட மகளிர், மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சுரண்டையில் நேற்று(ஜன.22) நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் பங்கேற்றனர்.

News January 22, 2025

தென்காசியில் 490 கடைகளுக்கு சீல்: கலெக்டர் தகவல்

image

தென்காசி கலெக்டர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் 4204664 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கூட்டாய்வின் மூலம் ரூ.1,20,05,000/- அபராதம் விதிக்கப்பட்டு 490 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து 33 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2025

சீமான் கொடும்பாவி எரிக்கப்படும்-மதிமுக எச்சரிக்கை

image

தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான இராம உதயசூரியன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பெரியார் குறித்த விமர்சனங்களை சீமான் நிறுத்தாவிட்டால், மதிமுக தலைமை அனுமதியோடு தென்காசி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சீமான் கொடும்பாவி எரிக்கும் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்

News January 22, 2025

தென்காசியில் புகார் அளிக்க எண்கள் வெளியீடு

image

“தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை, வெளிமாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்தல் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் நடமாட்டம் தொடர்பாக 948754 8177, 9411494115 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்” என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.*உங்கள் சமூக ஆர்வலர் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க*

error: Content is protected !!