India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி குற்றால அருவிகளில் ஒன்றான, புலியருவி பழைய குற்றாலம் செல்லும் பாதையில் உள்ளது. இது பிரதான அருவியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு அருவி. இங்கு அதிக மழைப்பொழிவு காணப்படுகின்ற சமயத்தில் மட்டுமே நீர் வருகின்றது. மிகவும் பாதுகாப்பான ஒரு அருவி. சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி உண்டு.
தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.28) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்யக்கூடும். தமிழகம் முழுவதும் கோடையில் பெய்து வந்த மழை தற்போது நின்று வெப்பநிலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்காசியை சேர்ந்த தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் ராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், குற்றாலம், தென்காசி ,வால்பாறை, நீலகிரி, பணகுடி ,திருக்குறுங்குடி,மாஞ்சோலை, காக்காச்சி,வள்ளியூர், கல்லிடை குறிச்சி ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என அறிவித்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் மதினாநகர், கிரசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியத்திலிருந்து மின் தடை அடிக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அங்கு சில வீடுகளில் தொடர்ந்து மின்தடை உள்ளது. இது குறித்து மின்வாரிய நிர்வாகி அதிகாரிகளிடம் தெரிவித்தும் இரவு வரை நடவடிக்கை இல்லை. இதனால் இரவு வரை இந்தப் பகுதி மக்களுக்கு சிரமம் நீடித்தது. இவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை.
தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று சீசன் தொடங்கியுள்ளதால் மின்னோட்டத்திற்கு தடை ஏற்படும் நிகழ்வுகள் நடைபெற தொடங்கியுள்ளன. இதை தவிர்ப்பது குறித்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் காற்று அதிகரிக்கும் என்பதால் மின்பாதைகளில் ஊடுருவும் மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட ஆலோசனை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ செலவு தொகையை சேமநல நிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு சமர்ப்பித்த காவல் துறையினர்15 நபர்களுக்கு மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் இன்று காவலர் சேமநலநிதி உதவித்தொகை வழங்கினார்.உடன் காவல் உயர் அதிகாரிகள் இருந்தனர்.
தென்காசி மேல மெஞ்ஞானபுரம் தென்காசி டிஸ்ட்ரிக்ட் கிளப்பில் வைத்து திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட் ரைபில் கிளப் சார்பாக நெல்லை ,தூத்துக்குடி, குமரி, ராஜபாளையம், திண்டுக்கல் மாவட்டங்கள் இடையான துப்பாக்கி சுடும் போட்டியின் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் செகரட்டரி வேலு சங்கர் விழாவிற்கு தலைமையேற்று வெற்றி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா அன்று தமிழக முதல்வர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் நிறுவனம் ஆகிய இரண்டு வகையான பிரிவிற்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவின் போது இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வி தொடரும் தகுதியுடைய மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரியில் உள்ள புதுமைப்பெண் திட்ட பொறுப்பு அலுவலர்களிடம் தங்களது விவரங்களை பதிவு செய்து திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக்கொண்டார்
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் தென்காசி சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் வருகிற 30-ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது என தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் இன்று தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு ,உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.