India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட காவல்துறை அவசர உயிர் காக்கும் ஊர்தியான ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு செல்வது மிக அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது. கேரளத்தில் அவசர ஊர்திக்கு வழிவிடாமல் சென்ற வாகன ஓட்டிக்கு அபராதம் வழங்கியதை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் மக்களுக்கு இந்தச் செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு இன்று(நவ.,17) திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், திருமண மண்டபத்தில் நடைபெற்ற மது விருந்தில் நண்பர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், இலஞ்சி பகுதியை சேர்ந்த முனியாகணேசன் வெட்டியதில், காசிமேஜர்புரத்தை சேர்ந்த பட்டமுத்து என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் 3வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, இன்று(நவ.,17) சையது மெட்ரிக் பள்ளி மாணவிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ரோலர் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தென்காசியில் பேருந்து நிலையம், சுற்றுலாத்தலங்கள் போன்ற அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்னை செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும், அசிங்கமாக பேசுவதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன. இதை தடுக்கும் பொருட்டு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் நேற்று(நவ.,16) திருநங்கைகளை சந்தித்து அறிவுரைகள் வழங்கினார்.
நெல்லையில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்ததை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி தேடலில் நேற்று மாலை தடையை மீறி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொது செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில் வட்டாரம் தெற்கு சங்கரன்கோவில் வருவாய் கிராமத்தில் நேற்று(நவ.,16) நடைபெற்ற டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுக்கும் பணியில், தென்காசி மாவட்டத்தின் பயிர்சாகுபடி கணக்கெடுக்கும் பணி கண்காணிப்பு அலுவலர் ஜெயகாந்தன் ஐஏஎஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து கணக்கெடுப்பு பணியின் முன்னேற்ற விவரங்கள் கேட்டறிந்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மிகப் பிரமாண்டமாய் நடைபெற்று வரும் மூன்றாவது பொதிகை புத்தகத் திருவிழாவில், தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக அறிவியல் செய்முறை இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 மற்றும் 20ஆம் தேதி 1-3 மணி வரையில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியில் இன்று (நவ.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 – ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3வது பொதிகை புத்தக கண்காட்சி நேற்று முதல் தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாள்தோறும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் அறிவியல் செயல்முறை வருகிற 19ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக்கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் தேர்தல் பணியாற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர் முதல் உதவியாளர் வரை அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் ரூ.171 கோடி மதிப்பூதியம் அனுமதி வழங்கி தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 5 தொகுதிகளைக் கொண்ட தென்காசி மாவட்டத்திற்கு ரூ.3 கோடியே 58 லட்சத்து 14 ஆயிரத்து 727 கிடைக்கும் என நேற்று தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.