Tenkasi

News November 5, 2024

அம்பேத்கர் விருதுக்கு நவம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(நவ.05) வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கான விண்ணப்ப படிவத்தை தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நவம்பர் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

News November 5, 2024

ஆய்க்குடியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவு

image

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றும்(நவ.,5) கனமழை பெய்தது. இதன்படி தென்காசியில் 5.5 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 1 மில்லி மீட்டர், ஆய்க்குடியில் 17 மில்லி மீட்டர், சங்கரன்கோவிலில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 5, 2024

தென்காசி மாவட்டத்தில் குறைதீர்க்கும் முகாம் தேதிகள் அறிவிப்பு

image

நெல்லை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி மின் கோட்ட அலுவலகத்தில் இன்றும், வரும் 19ஆம் தேதி கடையநல்லூர் மின் கோட்ட அலுவலகத்திலும், 26 ஆம் தேதி சங்கரன்கோவில் மின்கோட்ட அலுவலகத்திலும் மின் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் பயனாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

News November 5, 2024

பள்ளி நிர்வாகி போக்சோ வழக்கில் கைது

image

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் பகுதியில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவருக்கு பள்ளி நிர்வாகி கோபிநாத்(29) என்பவர் பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சங்கரன்கோவில் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 5, 2024

தென்காசிக்கு வருகை தரும் சீமான்

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற நவம்பர் 13ஆம் தேதி தென்காசி மாவட்ட பகுதிகளில் கலந்தாய்வுக் கூட்டம், அதனைத் தொடர்ந்து சாதி வாரி கணக்கெடுப்பும் சமூகநீதி மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள உள்ளார். விரைவில் இடம் அறிவிக்கப்படுவதாக” தெரிவித்தார்.

News November 5, 2024

ஊத்துமலை அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை

image

ஊத்துமலை அருகே உள்ள கருவந்தா கிராமத்தை சேர்ந்த செல்ல காளை மகன் சுரேஷ் (38), கூலி வேலை செய்து வரும் இவர் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று குடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றபோது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் கத்தியால் தனது மனைவி சிவனம்மாள் (35) கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 4, 2024

தீவிர சோதனைக்கு பின்னரே ரயில் அனுமதி

image

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று மட்டும் கடையநல்லூர் வழியாக சென்னைக்கு சுமார் 7 ரயில் புறப்பட்டு சென்றது. ஏராளமான போலீசார் ஒவ்வொரு ரயில் வருவதற்கு முன்பாக ரயில்வே தண்டவாளங்களை சோதனை செய்தனர். தண்டவாளத்தில் கல் வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்த பிறகு ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டனர் .

News November 4, 2024

தகாத உறவை கண்டித்து தான் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

image

சிவகிரியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (40) திருமணம் ஆகி குழந்தை உள்ளனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன 30 வயது பெண்ணுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இதனை உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனையடுத்து நேற்று இருவரும் சேத்தூர் வயல் பகுதியில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது பாக்கியராஜ் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

News November 4, 2024

திமுக ஆலோசனை கூட்டம் மாசெ அறிக்கை

image

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 05.11.2024 அன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன் ஆலோசனை வழங்க உள்ளார். அதுபோல், கடையநல்லூர் தொகுதி கூட்டம் மாலை 4 மணியளவில், அதன்  பொறுப்பாளர் நெளஷாத் தலைமையில் நடக்கிறது” என தெரிவித்துள்ளார்.

News November 3, 2024

தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (நவ 3) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.