India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025 – 2026 கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (AFC) மூலம் விண்ணப்பிக்கலாம்.என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (மே.08) அழைப்பு விடுத்துள்ளார் .
தென்காசியில் அரசு வேலை வேண்டுமா? அப்போ இது உங்களுக்கானது தென்காசியில் Staff Nurse, Pharmacist, ANM மொத்தமாக அரசு 11 பணியிடங்கள் உள்ளன.B.Pharm, B.Sc, BA, D.Pharm, Diploma, ITI, M.Sc, MA, Nursing தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.ரூ.14,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.<
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 01.05.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.
செங்கோட்டை – நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் தரையில் கூட்டம் அலைமோதும் நிலையில், ஒரு ரயிலில் மட்டும் இரு மார்க்கத்திலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டது. அதிகாலை மற்றும் மாலை நேர ரயில்களில் முக்கியத்துவம் கருதி, அடுத்த 10 நாட்களுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகத்தினர் உறுதி அளித்துள்ளதாக ராபர்ட் ப்ரூஸ் எம்பி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் இலஞ்சி வரலாற்று சிறப்புமிக்க திருவிளஞ்சி குமாரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களை மிக முக்கிய திருவிழாவான சித்திரை பெரும் திருவிழா இன்று தொடங்கியது. இதை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமிளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி நீளா வெங்கடாஜலபதியைபோன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்துகொள்கிறார்கள்.திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் “கறிவேப்பிலைசாதம், வழங்குவார்கள்
▶️தென்காசிகலெக்டர்- 04633-290547.
▶️கலெக்டரின் நேர்முக உதவியாளர்- 04633-290548.
▶️மாவட்ட வருவாய் அலுவலா்- 004633-290546.
▶️தனித்துணை ஆட்சியர்-04633-290548.
▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்- 04633-212114.
தென்காசி மக்களே இது போன்ற முக்கிய எண்களை தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம். விவசாயியான இவர் இரவு வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் கொலை நடந்ததாக தகவல்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம். விவசாயியான இவர் இரவு வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் கொலை நடந்ததாக தகவல்.
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருமலைக்கோயில். இங்கு கோவில் அமைக்கப்படும் போது, முருகப்பெருமானின் திருமேனியில் கோடாரிபட்டு மூக்கில் தழும்பு ஏற்பட்டது. அது அழகாக இருந்ததால் மூக்கன் என அழைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காண்டி என்ற பெயர்களும், பெண் குழந்தைகளுக்கு மூக்கம்மாள் என்ற பெயர்களும் வைக்கின்ற வழக்கமும் உள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.