Sivagangai

News March 23, 2025

காரைக்குடி: வரி கட்டாத கடைகளுக்கு சீல்

image

காரைக்குடி மாநகராட்சியில் ரூ.4 கோடியே 32 லட்சம் வசூலிக்க வேண்டியுள்ளது. வரி செலுத்துபவர்கள் இ-சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24ம் தேதிக்குள் வரி பாக்கி செலுத்தாதவர்களின் வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்களிடம் காட்சிப்படுத்தப்படும் என கமிஷனர் சித்ரா எச்சரித்துள்ளார்.

News March 23, 2025

சிவகங்கை:இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

image

சிவகங்கை மாவட்டம் பள்ளத்துரை சேர்ந்தவர் பழனி என்ற பழனிச்சாமி.இவர் மீது 2023ம் ஆண்டு காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. அப்போது பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் சாட்சி சொல்ல வரவில்லை.இதை தொடர்ந்து அவருக்குப் பிடி வாரன்ட் பிறபித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 22, 2025

வரி பாக்கி வசூலிக்க ஜவுளிக்கடை முன் குப்பைத்தொட்டி 

image

காரைக்குடி மாநகராட்சியில் 100 சதவீத வரி வசூல் இலக்கை அடைய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.வரி கட்டாத கட்டடங்களுக்கு சீல் வைப்பது, வரிவசூல் செலுத்தாத வணிக வளாகங்கள் முன்பு குழி தோண்டுவது என பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் வரிபாக்கி செலுத்தாததாக கூறி ஜவுளிக்கடை முன்பு மாநகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டியை வைத்தனர்.

News March 22, 2025

சிவகங்கையில் தேனீக்கள் கொட்டி ஒருவர் பலி

image

தேவகோட்டையை சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி. இவர் வீட்டில் மரத்தை வெட்ட உடப்பன்பட்டியை சேர்ந்த காளிமுத்து வந்தார். மரத்தை வெட்டிய போது மரத்திலிருந்து வெளியேறிய மலை தேனீக்கள் காளிமுத்துவைக் கொட்டின. வீட்டின் வெளியே நின்றிருந்த ராஜாமுகமது அவரது மனைவி, மகன் ஆகியோரை தேனீக்கள் கொட்டியது.இதில் ராஜா முகமது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News March 21, 2025

குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் / படைப் பணியாற்றுவோர் / சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் (D.D.C Hall-ல்) வருகின்ற 25.03.2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இன்று (மார்ச்.21) தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2025

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை – அசத்தும் சிவகங்கை

image

சிவகங்கை மாவட்டம் அரசு பள்ளிகளில் 2025-26 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மார்ச்.1 முதல் 20ஆம் தேதி வரை 10,316 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 10 ஆயிரத்தை தாண்டி சிவகங்கை முதலிடத்தில் உள்ளதால் ஜூன் மாதத்தில் 1 லட்சத்தை தாண்டும் என்று பள்ளிகல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2025

காரைக்குடியில் கொலை – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

image

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் கஞ்சா வணிகர் காவல்நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக சென்ற போது அவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்திருக்கிறது என்பதிலிருந்தே தமிழகத்தில் கொலையாளிகள் காவல்துறை மீது எந்த அளவுக்கு அச்சமின்றி துணிச்சலுடன் செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும் தமிழகத்தில் தினமும் குற்றங்கள் நடக்கிறது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

JEE பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து வழங்கும் அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு (JEE Mains) பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (மார்ச்.21) தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

அரசு பஸ் மோதி கார் பலத்த சேதம் – உயிர் தப்பிய இருவர்

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சக்குடி விளக்கில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் மீது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இதனால் காரின் முன் பகுதி சேதமடைந்தது. சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காரில் பயணித்த நபர்கள் உயிர் தப்பினர். திருப்புவனம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News March 21, 2025

சிவகங்கை மாவட்டத்திற்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு 185 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். <>இங்கு கிளிக்<<>> செய்து மார்ச்.21-ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். Share It.

error: Content is protected !!