Sivagangai

News November 9, 2024

டாக்டர் அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க தகவல்

image

2024-2025 ஆம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் & பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்யும் ஆதிதிராவிடர் இனத்தைச்சார்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர், சிறந்தோர்க்கு 2025 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று விருதுகள் வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.  நவ.20 தேதிக்குள் இதற்குவிண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

News November 9, 2024

விஜய் வருகையால் 3 பேருக்கு ஆபத்து

image

காரைக்குடியில் சிவகங்கை எம்.பி கார்த்திக் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது விஜய் வருகையால் திமுக, அதிமுகவுக்குப் பாதிப்பு இருக்காது.நேரடியாக விஜய் கட்சி சீமானைத்தான் பாதிக்கும். ஏனென்றால் அவருக்கு என்று நிரந்தர வாக்கு வங்கி இல்லை. அடுத்து தேமுதிக பாதிக்கப்படும். அடுத்து பாஜக என்ற கட்சியை தாண்டி அண்ணாமலை அதிரடியாகப் பேசுவதால் ஒரு கூட்டம் அவர் பின்னால் இருந்தது. அதுவும் உடையும் என்றார்

News November 8, 2024

சிவகங்கை எஸ்.பி.-யிடம் ஹெச் ராஜா மீது புகார்

image

சமூக மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  ஜவாஹிருல்லாவையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனையும் தேச விரோதிகள் என அவதூறு பரப்பும் பாஜக மாநில நிர்வாகி எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

News November 8, 2024

சிவகங்கையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (08.11.2024) நடைபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், ஓய்வூதியதாரர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்எஸ்.செல்வசுரபி உட்பட பலர் இருந்தனர். 

News November 8, 2024

சிவகங்கை DELIVERY BOYS கவனத்திற்கு

image

சிவகங்கை அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணையம் சார்ந்த “கிக்” தொழிலாளர்களை (சுவிக்கி, சொமேட்டோ, அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆன்லைன் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள்) பதிவு செய்ய சிறப்பு முகாம் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இதில், ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

News November 8, 2024

தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை

image

தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டாடும் வகையில் பட்டாசு விற்பனை நடைபெற்றது. கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது என  கூட்டுறவுத்துறை கேஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

சிவகங்கை மாவட்டத்தில் சராசரியாக 1.47 மி.மீ. மழை பதிவு

image

சிவகங்கை பகுதியில் 6.00 மில்லி மீட்டர் மழைப்பதிவும் தேவகோட்டை பகுதியில் 1.80 மில்லிமீட்டர் மழைப்பதிவும் திருப்பத்தூரில் 5.40 மில்லி மீட்டர் மழை பதிவும் நேற்று 6:00 மணி முதல் இன்று(நவ.08) 6.00 மணி வரை மொத்தமாக 13.20 மில்லி மீட்டர் மழை பதிவும் சராசரியாக 1.47 மில்லிமீட்டர் மழைப்பதிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

சிவகங்கையில் தொடர் கொலை: எஸ்.ஐ.,க்கள் மாற்றம்

image

சிவகங்கையில் தீபாவளிக்கு பிறகு தொடர்ந்து 3 கொலை சம்பவங்கள் நடந்ததால் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணனை சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கும், எஸ்.ஐ., வைரமணியை திருக்கோஷ்டியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், திருக்கோஷ்டியூரில் பணிபுரிந்த எஸ்.ஐ., சஜீவ்வை சிவகங்கை நகருக்கும் மாற்றியுள்ளனர்.

News November 8, 2024

சிவகங்கையில் 39 பேர் மீது குண்டாஸ்

image

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 39 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டுள்ளது. இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக 27 பேர், பாலியல் வழக்கு தொடர்பாக 3 பேர், கஞ்சா வழக்கு தொடர்பாக 1, மது விற்பனை தொடர்பாக 5, திருட்டு தொடர்பாக 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

இந்திய குடிமை பணியில் சேர ஆயத்த பயிற்சி

image

சிவகங்கை மாவட்டம் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் சிறந்து விளங்கிடும் வகையில், ஆயத்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,உதவி இயக்குநர் அல்லது 04575-240848, 93453 61068 என்ற தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.