Sivagangai

News November 11, 2024

பதிவின்றி செயல்படும் விடுதிகளுக்கு சீல் 

image

சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள், போதை மறுவாழ்வு மையம், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான, மாற்றுத்திறனாளிகளுக்கான போன்ற இல்லங்கள், பெண்கள் குழந்தைகளுக்கான விடுதிகள் ஆகிய அனைத்து இல்லங்கள் விடுதிகளும் உடனடியாக (நவ-30)-க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

சிவகங்கையில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்

image

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு & வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2வது அல்லது 3ம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகின்ற (நவ.15) (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தகவல்.

News November 11, 2024

சிவகங்கை மாவட்ட திட்டங்களை தெரிந்துகொள்ள Whatsapp channel

image

தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட திட்டங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரபூர்வ ஆட்சியர் அலுவலக Whatsapp channel-ஐ பின்தொடர வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்றைய தினம் (நவ.11) தெரிவித்துள்ளார். *பகிரவும்* SHARE*

News November 11, 2024

திரையரங்கில் ராணுவ வீரர்களுக்கு சிவகங்கை மக்கள் மரியாதை 

image

சமீபத்தில் ராணுவத்தினை மையப்படுத்தி வெளியான அமரன் திரைப்படம் மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சிவகங்கை யாழினி திரையரங்கில் அமரன் திரைப்படம் காண வந்த 20 ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டியும் சல்யூட் செய்தும் மரியாதை செலுத்தினர். மேலும் அன்றைய தினம் ராணுவத்தில் மறைந்த வீரருக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

News November 11, 2024

விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைக்க தேவையான வல்லுநர் விதை, ஆதாரநிலை மற்றும் சான்று நிலை நெல் விதைகளை வட்டார விரிவாக்க மையங்களில் பெறலாம். இது தவிர சிறுதானியங்களான குதிரைவாலி, கேழ்வரகு, பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு, எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள் ஆகிய ரகங்களில் விதைப்பண்ணை அமைக்க இருக்கும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம், என வேளாண்மை துறை கூறியுள்ளது.

News November 10, 2024

சிவகங்கை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் இந்நிலையில், தென்மாவட்டங்களின் சில இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. தற்போது பெரும்பாலான வடமாவட்டங்களுக்கு வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்திற்கும் மழை எச்சரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 10, 2024

முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார். மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் நவ.20க்குள் பதிவு செய்ய வேண்டும். மருந்தகத்திற்கு விண்ணப்பிப்பவர்களிடம் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

சிறந்த பள்ளிக்கான விருதுக்கு 3 பள்ளிகள் தேர்வு

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது; 2023-2024ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டம் குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, சிங்கம்புணரி அ.காளப்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, திருப்புவனம் பழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளன என்றார்.

News November 9, 2024

சிவகங்கை: வாக்காளர் திருத்த சிறப்பு முகாம் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கம்/முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற 16.11.2024 17.11.2024, 23.11.2024, 24.11.2024 ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் இன்று (நவ -9) தெரிவித்துள்ளார்

News November 9, 2024

டாக்டர் அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க தகவல்

image

2024-2025 ஆம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் & பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்யும் ஆதிதிராவிடர் இனத்தைச்சார்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர், சிறந்தோர்க்கு 2025 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று விருதுகள் வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.  நவ.20 தேதிக்குள் இதற்குவிண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்