India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப்.01 – ஏப்.13, 2ம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, 3ம் தொகுப்பு ஏப்.29 – மே11, 4ம் தொகுப்பு மே.13 – மே.25, 5ம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். பயிற்சி பெற விரும்புவர்கள் குறைந்தது 4 அடி உயரம் இருக்க வேண்டும்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி முடித்து விடுதிக்குச் சென்ற பெண் பயிற்சி மருத்துவர் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தினார். அவரின் கூச்சலால் சக மருத்துவர்கள் கூடி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியால் குற்றவாளியைத் தேடி, ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த 20 வயது சந்தோஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் நெல் வியாபாரம் செய்பவர் கோபாலகிருஷ்ணன் (63) மதுரையை சேர்ந்த நெல் கமிஷன் வியாபாரிகளாகும் கார்த்திக், குமார் ஆகியோருக்கு 2023 அக்டோபரில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள நெல் மூடைகள் வழங்கினார். ஆரம்பத்தில் பணம் செலுத்திய அவர்கள், பின்னர் பணம் தரவில்லை. பணம் தராததால், கோபாலகிருஷ்ணன் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் பயிற்சி பெண் மருத்துவர் தாக்கப்பட்ட வழக்கில், மருத்துவர் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்ததில், சிவகங்கை அருகே ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் இதில் குற்றவாளி என நகர் போலீசார் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 01.04.2025 முதல் 08.06.2025 வரை ஐந்து கட்டங்களாக நடைபெறும். 12 நாட்கள் பயிற்சி பெற 4 அடி உயரம் கொண்ட சிறுவர்கள் தகுதி பெறுவர். பயிற்சி கட்டணம் ரூ.1,500 + 18% GST. காலை மற்றும் மாலை நேரங்களில் பயிற்சி நடைபெறும். விபரங்களுக்கு 04575299293 அல்லது 7401703503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ரயில் மாறி ஏறி 20 ஆண்டு காலமா சிவகங்கைல கொத்தடிமையா வாழ்ந்த ஆந்திராவைச் சேர்ந்தவர பத்தி கடந்த சில தினமா பேசிட்டு இருக்கோம்.அதுக்கப்புறமா அவர மீட்டு நிதி உதவி கொடுத்து அனுப்பியாச்சு.இதுபோன்ற கொத்தடிமை சம்பவமெல்லாம் துபாய் போன்ற அரபு நாடுகள்ல இருக்கும்ன்னு தெரியும்.ஆனா நம்ம சிவகங்கைலயே இத்தன வருஷமா ஒருத்தர் கொத்தடிமையா வாழ்ந்துட்டு வந்திருக்காரு அப்டிங்கிறது உங்களால ஏத்துக்க முடியுதா.?Comment.Share
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோவில்களுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு 77 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே அரசால் அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் இமையம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீர் மரணத்திற்கு சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தனது சார்பாகவும் தனது தொகுதி மக்களின் சார்பாகவும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை, 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரியை உயர்த்தியது, கட்டடங்களுக்கு கூடுதலாக வரி விதித்தது, வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியா்கள் தகாத முறையில் நடந்துகொள்வது, கடைகளின் முன் குப்பைத் தொட்டிகளை வைப்பது போன்றவற்றைக் கண்டித்து வருகிற 28ஆம் தேதி கடையடைப்பு, மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. *ஷேர்
Sorry, no posts matched your criteria.