Sivagangai

News November 16, 2024

குழந்தைகள் தொழிலாளர்கள் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in இணையதள முகவரியிலோ 04575-240521 (1) Child Helpline 1098 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

சிவகங்கை அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை

image

சிவகங்கை துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(நவ.16) சிவகங்கை நகா், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜா் குடியிருப்பு, வந்தவாசி, பையூா், வாணியங்குடி, கீழக்கண்டணி, சுந்தரநடப்பு, சோழபுரம், கூத்தாண்டன், சூரக்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்செயற் பொறியாளர் முருகையன் அறிவித்துள்ளார்.

News November 15, 2024

இனி பயோ மெட்ரிக் பதிவு செய்தால் தான் கேஸ் சிலிண்டர் 

image

நாடு முழுவதும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை மூலம் பொதுமக்களுக்கு காஸ் சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிலிண்டர் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நவம்பர் 30-க்குள் உடனடியாக பயோமெட்ரிக் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News November 14, 2024

சிவகங்கை: டிஜிட்டல் பயிர் சர்வே பணி தொடக்கம்

image

தமிழகத்தில் விவசாயத்திற்கு பயன்படும் நிலப்பரப்பு, விவசாயிகள் நடவு செய்துள்ள நெல், கரும்பு, பருத்தி, காய்கறி, பயறு வகைகள் உள்ளிட்டவற்றை கணக்கிடும் டிஜிட்டல் பயிர் சர்வே மாநில அளவில் துவக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 521 வருவாய் கிராமங்களின் கீழ் 17 லட்சத்து 60 ஆயிரம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் நடவு செய்துள்ள பயிர்கள் குறித்த டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் 1,098 பேர் ஈடுபட்டுள்ளனர்.

News November 14, 2024

3000 ஆண்டு பழமையான இரும்பு எச்சம் கண்டெடுப்பு

image

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நல்லேந்தல், புரசடைஉடைப்பு உள்ளிட்ட பகுதியில் காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் நேற்று தி.பாலசுப்பிரமணியன் தலைமையில் நல்லேந்தல் கிராம காடுகளில் ஆய்வு செய்ததில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு எச்சம், கிண்ணம், கல்பாசி, முதுமக்கள் தாழிகள் இருப்பதை கண்டறிந்ததாக கூறினர்.

News November 14, 2024

சிவகங்கையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் பொருட்டு, சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையத்தில் நாளை(நவ.15) காலை 10:30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

வாக்காளர் அட்டை திருத்த முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் வருகிற நவ.16,17, மற்றும் 23, 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

சிவகங்கையில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டம், வேலைவாய்ப்பு முகாம் நாள் (நவ.15)(வெள்ளிக்கிழமை) இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு [ம] தொழில்நெறி வழிகாட்டும் மையம்.10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,இ.ஆ.ப.,தகவல் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கான தடை நீக்கம்

image

சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என மனுதாரர் தடுப்பணை கட்டுவது குறித்து புதிதாக மனு அளித்து நிவாரணம் பெறலாம் எனக்கூறி சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதனின் இடையீட்டு மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

News November 13, 2024

சிவகங்கை டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று (நவ.13) சிவகங்கை CITU டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பாக, டாஸ்மாக் மேலாளர் ஊழியர் விரோதப் போக்கையும், ஊழல் முறைகளை கண்டித்தும் துறைவாரி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு சிவகங்கை CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் மாறன் தலைமை வகித்தார்.