Sivagangai

News October 8, 2024

சிவகங்கை சிறந்த விவசாயிகளுக்கு விருது

image

சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்குடன் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து, சான்றுடன் முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.60,000, மூன்றாம் பரிசு ரூ.40,000 வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்.

News October 7, 2024

சிவகங்கையில் அடுத்தடுத்து ரேஷன் அரசி கடத்தல்

image

மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோவில் சந்திப்பு பகுதியில் மானாமதுரை காவல்துறையினர் அவ்வழியாக வந்த டாட்டா சுமோ வாகனத்தை சோதனை மேற்கொண்ட பொழுது அந்த வாகனத்தில் 25 மூடைகளில் சுமார் 625 கிலோ மதிப்புள்ள ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அந்த வாகனத்தை ஓட்டி வந்த சிவகங்கை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தியை (29) கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்து போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.

News October 7, 2024

போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.3.31 லட்சம் பறிமுதலில் 2 பேர் மீது வழக்கு

image

சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 1ஆம் தேதி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அதில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் ராமகிருஷ்ணனிடம் ரூ.3.28 லட்சம், பீரோவில் இருந்த கணக்கில் வராத பணம் ரூ.3,250 கைப்பற்றப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூக்கன், அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் ராமகிருஷ்ணன் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News October 7, 2024

கீழடியில் வர்ணம் தீட்டிய பானைகள் கண்டெடுப்பு

image

கீழடியில் 10 ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. தற்போதைய அகழாய்வில் மூன்று வர்ணம் தீட்டிய பானைகளும், வர்ணம் தீட்டப்படாத பானைகளும் கண்டறியப்பட்டுள்ளன. வர்ணம் தீட்டிய பானைகளில் ஒரே ஒரு பானையை தவிர மற்ற பானைகளை பண்டைய கால மக்கள் கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர்.வர்ணம் தீட்டிய பானைகளின் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

News October 6, 2024

கிடுகிடுவென உயர்ந்த தேங்காய் விலை

image

திருப்புவனத்தில் தேங்காய் விலை உச்சத்தில் உள்ளது. சிறிய காய் ரூ.30,பெரிய காய் ரூ.50 – ரூ.60 க்கு விற்கப்படுகிறது. குடோன் வியாபாரிகள் விவசாயிகளிடம் சில மாதங்களுக்கு முன்பு ரூ.6 க்கு வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ரூ.14 – ரூ.15 க்கு விவசாயிகளிடம் வாங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவிலிருந்து தேங்காய் வரத்து குறைந்துள்ளதால் இங்கு விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News October 6, 2024

தொழில் முனைவோர் படிப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் https://oneyearcourse.editn.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு academy@editn.in என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாக தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (அக்.6) தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

சிவகங்கை மாவட்ட மக்களே இந்த செயலி உங்களுக்கு உதவும்

image

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் நம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை தகவல்களை பொதுமக்கள் தமிழிலேயே TN-ALERT என்ற செயலியின் வாயிலாக அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இச்சேவைகளை பயன்படுத்திக் கொண்டு முன்னெச்சரிக்கை அறிவுரைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று (அக்.6) தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

லீன் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன மதுரை கிளையின் சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான ‘லீன்’ திட்டம் குறித்த விழிப்புணர்வு அக். 15 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.

News October 6, 2024

மானாமதுரையில் நவராத்திரி விழா.

image

சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் ஸ்ரீ சோமநாத சுவாமி ஆலயத்தின் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. நேற்று (ஆக.05) இரவு அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் வீரை கவிராஜ பண்டிதருக்கு பாலா ஸ்வரரூபமாக காட்சியளித்தார். ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News October 5, 2024

சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் துவக்க அழைப்பு

image

சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை சிட்கோ தொழிற்பேட்டையில் 8 தொழில் மனைகள், காரைக்குடியில் 165, கிருங்காக்கோட்டையில் 52 தொழில் மனைகள் காலியாக உள்ளன. புதிதாக தொழில் துவங்க விரும்புவோர் www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.