India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஹிந்து சமய அறநிலைய துறையினர் மீட்டனர். இணை ஆணையர் பாரதி தலைமையில் மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிப்பள்ளம், சோலை குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள 13 ஏக்கர் நில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடங்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என எச்சரிக்கை பலகையையும் வைத்தனர்.
பிள்ளையார்பட்டியில் பி.என்.பி. உழவர் பயிற்சி மையத்தில் இலவச தொழில் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இங்கு ஒரு நாள் பயிற்சியாக ஏப்.16, 17,19,29 ல் உணவு பொருட்கள் உரிமம் பெறுதல்,லேபிளிங்,பேக்கேஜிங், நாட்டுக்கோழி வளர்ப்பு, மாட்டு சாணம் மதிப்பு கூட்டல் உள்ளிட்ட பல பயிற்சி முகாம் நடைபெறும். விரும்புவோர் 94885 75716 OR 95784 99665 ல் அழைத்து பதிவு செய்யலாம். உங்க நண்பருக்கும் பகிரவும்.
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே போலீசாருக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட வீடுகளை போலீசார் வாங்கி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். வீடுகளைச் சுற்றிலும் அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை ஏற்பட்டு நோய்கள் பரவுவதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக இரயில் எண்-16103/16104, தாம்பரம்-ராமேஸ்வரம், பாம்பன் விரைவு ரயில் வரும் 06-04-2025 (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படவுள்ளது. இதனால் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வரும் பயணிகளுக்கும், ராமேஸ்வரம் வரும் பயணிகளுக்கும் வசதியாக அமையும் என்று மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு முதன் முதலில் சுதந்திரப் போராட்டத்தை தொடங்கி மீண்டும் தனது நாட்டை பிடித்த முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியாருக்கு டெல்லியில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வேலுநாச்சியாரின் வாரிசான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் டெல்லி வந்தடைந்தார். அவரை பாஜக மஹிளா மோர்ச்சா சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகங்கை: உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் ஏப்.,16ல் காளையார்கோவில் தாலுகாவில் நடக்கிறது. இதற்காக ஏப்.,1 முதல் 14ம் தேதி வரை காளையார்கோவில் தாலுகாவில் உள்ள பேரூராட்சி,வி.ஏ.ஓ.ஊராட்சி அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை வழங்கலாம். ஏப்.16 அன்று நடக்கும் முகாமில் மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். அன்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிவகங்கை மாவட்டப் பிரிவு சாா்பில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற 1.4.2025 முதல் 8.6.2025 வரை 5 கட்டங்களாக சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தை 04575 299293 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03503 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
இளையான்குடி அருகே விஜயன்குடி கிராமத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கிருந்து சிவகங்கை செல்லும் ரோடு 15 ஆண்டாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் ரோடு முழுவதும் கரடு,முரடாக கற்கள் சிதறி காணப்படுகிறது. அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், தற்போது ஊரை காலி செய்து வேறு இடத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்று ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
கற்பக விநாயகர் கோயில்
சிவகங்கை மாரியம்மன் கோயில்
காசி விஸ்வநாதர் கோயில்
குன்றக்குடி முருகன் கோயில்
வேட்டங்குடி மாரியம்மன் கோயில்
திருமயம் பெருமாள் கோயில்
திருப்பாச்சேத்தி அம்மன் கோயில்
ஸ்ரீ கல்யாண பசுவதீஸ்வரர் கோயில்
பழமலை நாதர் கோயில்
புதுவயல் பிள்ளையார் கோயில்
சாக்கோட்டை பெரியநாயகி கோயில்
மும்முடி நாதர் கோயில்
பரஞ்சோதி ஈஸ்வரர் கோயில்
கொடுங்குன்றீஸ்வரர் கோயில்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு நிலங்களில், அரசியல் கட்சிகள் சார்பாகவும், இதர சாதி, சய, சங்கமங்கள் சார்பாகவும் எழுப்பப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 15 நாட்களுக்குள் அந்தந்த அமைப்பினர் தங்களது சொந்த செலவில் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.