Sivagangai

News October 16, 2024

வாகனங்கள் ஏலமிடப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் நவ.15ஆம் தேதி அன்று பிற்பகல் 4 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு Mahindra Bolero வாகனங்களை பொது ஏலமிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுப்போர் ரூ.1000/- வைப்புத் தொகையினை ஏலம் நடைபெறவுள்ள தேதி அன்றே செலுத்தி தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்தில் 2 அரசு மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இக்கடைகள் பேருந்து நிலையத்திற்கு முன்பு இருந்ததால் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பெண்கள், மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இது தொடர்பாக ராதா கிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இரண்டு கடைகளையும் மாற்ற உத்தரவிட்டார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News October 16, 2024

சிவகங்கை: போராட்டத்தின் பலனாக 149க்கு பதவி உயர்வு

image

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் விளைவாக குறுவள மைய ஊழியர்கள் 118 பேருக்கு, பிரதான மைய ஊழியராகவும்,பிரதான மைய உதவியாளர் 39 பேர்களுக்கு, பிரதான மைய பணியாளராக பதவி உயர்வு வழங்கி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உத்தரவிட்டுள்ளது

News October 15, 2024

சிவகங்கை ஆட்சியரகத்தில் கலந்தாய்வு கூட்டம்

image

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் இரா.கஜலட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

News October 15, 2024

சிவகங்கை மாவட்டத்தில் 256 மி.மீ மழைப்பதிவு

image

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று (அக்.14&15) காலை 6 மணி வரை பெய்த கன மழையின் அளவுகள் சிவகங்கை 57 மி.மீ, மானாமதுரை 21.00 மி.மீ, இளையான்குடி 18.00 மி.மீ, திருப்புவனம் 9.20 மி.மீ, திருப்பத்தூர் 27 மி.மீ,
காரைக்குடி 19 மி.மீ, தேவகோட்டை 19.60 மி.மீ, காளையார்கோவில் 58 மி.மீ, சிங்கம்புணரியில் 27.20 மி.மீ, மொத்தம் 256 மி.மீ மழை சிவகங்கை மாவட்டத்தில் பெய்துள்ளது.

News October 15, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் முக்கியத் தகவல்

image

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகையுடன் தொழில் செய்து முன்னேறவும், தொழில் முனைவோராக வளரவும் அரசு உதவிட வேண்டும் என அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசு அலுவலக இடங்களில் வாடகை, டெபாசிட் இன்றி ஆவின் பாலகம் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் தகவல்.

News October 15, 2024

சிவகங்கை மாவட்டம் பேரிடர் கால அவசர எண் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பேரிடர் மற்றும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்ணை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று(அக்.15) வெளியிட்டுள்ளார். கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077 மற்றும் 04575-246233 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்

News October 15, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

சிவகங்கைமாநகரின் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News October 15, 2024

சிவகங்கை மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இப்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து இருப்பதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News October 14, 2024

மாவட்டத்தில் 13 வீடுகள் மழையின் காரணமாக சேதம்

image

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக இன்று (அக்-14) காரைக்குடியில் 2 வீடுகளும், சிவகங்கையில் 6 வீடுகளும், திருப்புவனத்தில் 2 வீடுகளும், சிங்கம்புணரியில் 1 வீடும், திருப்பத்தூரில் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக காரைக்குடி,திருப்பத்தூர், சிங்கம்புணரி, சிவகங்கை வட்டாட்சியர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நேர்வில் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.