Sivagangai

News March 23, 2024

சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி

image

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் மற்றும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.03.2024)   ஆஷா அஜித்,  மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

image

சிவகங்கை மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை(24.03.2024) அன்று அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் இப்பயிற்சியினை திறம்பட பெற்று, தங்களுக்கான தேர்தல் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

சிவகங்கை பாஜக வேட்பாளர் இவர் தான்

image

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தேவநாதன் யாதவ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2024

கூட்டணி கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

image

காரைக்குடி கலைஞர் பவளமாளிகையில் நேற்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவு துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர். பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் S.மாங்குடி மாவட்ட துணை செயலாளர் த.சேங்கைமாறன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

News March 21, 2024

அதிமுக நகர் கழக செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு

image

மானாமதுரையை சேர்ந்த துரைப்பாண்டியின் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக அதிமுக நகர கழக செயலாளர் விஜிபோஸ் ரூ.8 லட்ச பணம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல்  4 லட்சம் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து அவதூறாக பேசி கம்பியால் தாக்கியதாக காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் மீது புகார் அளித்த நிலையில் அவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 21, 2024

அதிமுக வேட்பாளர் இவர் தான்

image

சிவகங்கை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2024

தேர்தல்: சிவகங்கை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40% மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்களுக்கு சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம், தபால் வாக்கு அளிக்க படிவம் 12டி மார்ச் 21,22 தேதியில் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.

News March 19, 2024

சிவகங்கை: ரூ.50,000 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள், வியாபாரிகள் ரூ.50,000 க்கு மேல் ரொக்கம் மற்றும் ரூ.10,000 க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை உரிய ஆவணங்களுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள கலெக்டர் ஆஷா அஜித், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பொருட்களை திரும்பப்பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குறைதீர் கமிட்டியிடம் ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கிகொள்ளலாம் எனக் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!