India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி,ஊராட்சித் துறையின் சாா்பில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் காளையார்கோவில், தேவகோட்டை, மானாமதுரை ஆகிய ஒன்றியங்களில் உள்ள 124 ஊராட்சிகளில் 263 தொழில் முனைவோா்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.9.76 கோடி கடன் தொகை விடுவிக்கப்பட்டது. இதில் மானியம் ரூ.2.93 கோடி என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பத்து அல்லது பத்துக்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள, கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, அறிவிப்பு மற்றும் திருத்தங்களை https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை, காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இந்த மழை காரணமாக மின்னல், மின்சாரம் தாக்கியும், மழை நீரில் மூழ்கியும் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியின் கீழ் 4 பேருக்கு தலா ரூ.4 லட்சம் நேற்று (அக்.16) வழங்கப்பட்டதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்புவனம் அருகே உள்ள அகரம் கிராமத்தில் மந்தை அம்மன் கோயில் மற்றும் பொங்கல் கிடா பூஜை திருவிழா இன்று நடைபெற்றது. திருவிழாவில் பூஜை செய்யப்பட்ட கிடாய் கறி பங்கு போடும் போது ஏற்பட்ட தகராறில் ஜெயப்பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார். அவரை கொலை செய்த வழக்கில் அஜித்குமார்(24), ராஜேஷ் கண்ணன்(35) ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பிய ஓடிய கார்த்திக்கை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சிவகங்கை, இளையான்குடி, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கன மழையால் வீடுகள் சேதமடைந்ததை வட்டாட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். சிவகங்கை-2, காரைக்குடி-3, திருப்பத்தூர்-3, சிங்கம்புணரி-1, இளையான்குடி-1ஓட்டு வீடு சேதம் அடைந்த உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில், மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், தமிழில் பெயர் பலகை இல்லாத 9 கடை நிறுவனங்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அடுத்த புயல் உருவாகிறது என்றும், இதன் காரணமாக தென் மாவட்டங்களான மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 2024-2025 மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை
கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்யும் திட்டமானது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(அக்.16) தகவல் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை பதிவு மற்றும் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் நவ.15ஆம் தேதி அன்று பிற்பகல் 4 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு Mahindra Bolero வாகனங்களை பொது ஏலமிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுப்போர் ரூ.1000/- வைப்புத் தொகையினை ஏலம் நடைபெறவுள்ள தேதி அன்றே செலுத்தி தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.