Sivagangai

News April 26, 2024

சிவகங்கை: சித்திரை திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு

image

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று(ஏப்.25) மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தொழுவிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகளை காளையா்கள் பிடித்து மகிழ்ந்தனா்.

News April 25, 2024

சிவகங்கை: நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம்

image

கர்நாடகா, கேரளாவில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் 04575-240521 என்ற எண் வாயிலாக புகார் அளிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

News April 25, 2024

செட்டிநாட்டு கலையின் அடையாள அரண்மனை!

image

காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் அரண்மனை, செட்டிநாடு பாரம்பரிய கட்டிடக் கலையை பறைசாற்றி வருகிறது. ராஜா சர் அண்ணாமலை, 1912-ம் ஆண்டு கட்டினார். இதில் பளிங்கால் செய்யப்பட்ட பெரிய தூண்கள் நிரம்பிய அகண்ட தாழ்வாரம் இருக்கிறது. திருமணம், மதச் சடங்குகள் நடைபெறும் விசாலமான முற்றம் உள்ளது. இந்த அரண்மனையில் 1990 சதுர அடியில் 9 கார் நிறுத்தும் அறைகள், மின்தூக்கி (லிப்ட்) வசதியுடன் உள்ளன.

News April 25, 2024

சித்திரை திருவிழாவை காண வந்த 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

image

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண வந்த கல்குறிச்சியை சேர்ந்த ரேவதி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாந்தி ஆகிய இருவரிடம் 3 பவன் சங்கிலியையும்
வடக்கு சந்தனூரை சேர்ந்த காசியம்மாளிடம் 2 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக நேற்று மானாமதுரை காவல் நிலையத்தில் இம்மூவரும் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து இன்று விசாரித்து வருகின்றனர்.

News April 25, 2024

திருப்புவனத்தில் காற்றில் பறந்த பள்ளிக்கூடத்தின் கூரை

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வடகரை அரசு பள்ளி கூரை காற்றில் பறந்து மின்கம்பியில் விழுந்து விபத்து ஏற்பட்டது. வடகரை அரசு தொடக்கப் பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளி கட்டடம் சேதமடைந்ததால் கடந்த இரு மாதங்களுக்கு முன் புதிய கட்டடம் 33 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

சிவகங்கை: நகையில் அடகு வைத்தவர்கள் கைது

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் 7 பேர் நிதி நிறுவன ஊழியர்களின் ரகசிய தகவலின் பெயரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கிரி பிரவீன் உமேஷ்யின் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் R. பிரகாஷ் மேற்பார்வையில் அவர்களை கைது செய்தனர்.

News April 25, 2024

சிவகங்கை: பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம்

image

திருப்புவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம் கடந்த 4 நாட்களாக பூட்டியே கிடைக்கிறது. தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மக்கள் தொடர்பு அலுவலகம் போன்ற எந்த அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. இதனால் பொது மக்களுக்கு மிகவும் பாதிப்பாக இருந்தது. தேர்தல் முடிந்தும் திருப்புவனம் விஏஓ அலுவலகம் மூடியே கிடக்கிறது. தினமும் பொதுமக்கள் வந்து திரும்பி செல்கின்றனர்.

News April 24, 2024

ஜல்லிக்கட்டுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி 

image

சிவகங்கை, கண்டரமாணிக்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து கண்டரமாணிக்கத்தில் வருகிற 24- ஆம் தேதிக்குள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

News April 24, 2024

போலீசார் எனக்கூறி தங்கச் செயின் பறிப்பு

image

சிவகங்கை மேலரதவீதியை சேர்ந்த மீனாட்சி(68), நேற்று கோயிலுக்கு சென்றுக்கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் மீனாட்சியிடம் தாங்கள் போலீஸார் என கூறி அவர் அணிந்திருந்த 4 1/2 பவுன் தங்கச் செயினை கழற்றி பையில் வைக்க சொல்லியுள்ளனர். பிறகு அவர் கழற்றி வைக்க முயற்சித்த போது மர்மநபர்கள் செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனனர்.

News April 24, 2024

சிவகங்கை: சித்திரை திருவிழா தனியார் பள்ளி விடுமுறை

image

திருப்புவனம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் சித்திரத் திருவிழாவை முன்னிட்டு நாளை 22 ஆம் தேதி வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் லாடனேந்தல் வேலம்மாள் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு லோக்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகள் சித்திர திருவிழாவை கொண்டாடும் விதமாக விடுமுறை அறிவித்திருப்பதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

error: Content is protected !!