Sivagangai

News October 20, 2024

தமிழகத்தில் இரு மொழித் திட்டம் தான் –  ப. சிதம்பரம்

image

காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், தமிழகத்தில் அரசின் கொள்கையும், மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கக்கூடிய கொள்கையும் இரு மொழித் திட்டம் தான். இதனை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சிந்தனை இருக்கின்றதோ அதற்கு நேர்மறையான கருத்து தெரிவிப்பவர் தான் தமிழக கவர்னர் மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகள் இருக்கிறது என்பதே தவறு என்று கூறினார்.

News October 20, 2024

நகரங்களை தூய்மையாக்க மாணவர்களுக்கு பயிற்சி

image

காரைக்குடி எம்.பி.கார்த்திக் சிதம்பரம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரங்களை தூய்மையாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ‘தூய்மை நகர இன்டர்ன்ஷிப் நிகழ்வு காரைக்குடியில் நடைபெறுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் பயிற்சி பெற தூய்மை நகர ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா ஜலாலின் 9809936618 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்றார்.

News October 20, 2024

மருது பாண்டியர்களின் குருபூஜைக்கு டிடிவி தினகரன் வருகை 

image

 இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராடி வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் 223-வது குரு பூஜையினை முன்னிட்டு, 24ஆம் தேதி அன்று காலை 10 00 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வருகை தர உள்ளால். இதில், நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட கழகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

News October 19, 2024

தேவக்கோட்டையில் மாவட்ட அளவில் சதுரங்க போட்டி

image

தேவகோட்டை ராம்நகர் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 10 மணிக்கு தேவகோட்டை தாலுகா சதுரங்க கழகம் &காசி ஸ்ரீ நாகராஜன் கல்வி அறக்கட்டளை, கீரணி சுப்பிரமணியன் கல்வி அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவில் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. குறிப்பாக இப்போதைக்கு வயது வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2024

சிங்கம்புணரியில் சிங்கம் நடமாட்டம்?

image

சில ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலம் ஒன்றில் பெட்ரோல் பங்க் அருகே சிங்கம் நடமாடுவதாக வீடியோ ஒன்று பரவியது. தற்போது இந்த வீடியோவை சிங்கப்புணரியை சேர்ந்த சிலர் எடிட் செய்து சிங்கப்புணரியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நடமாடுவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதை வதந்தி என அறியாத பலரும் அதை பகிர்ந்து வருவதுடன், பெண்கள், சிறுவர்கள் அதிர்ச்சிக்கும் பயத்துக்கும் உள்ளாகி வருகின்றனர்.

News October 18, 2024

மழையால் சேதமான வீடுகளுக்கு ரூ.8,000 நிவாரணம்

image

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழைக்கு கிராமங்களில் உள்ள மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு, குடிசை வீடுகள் சேதமாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இதுவரை 44 வீடுகள் பகுதி, முழுவதும் சேதமானது. வீடுகளை இழந்தவர்களுக்கு பேரிடர் மீட்பு நிதியாக பகுதி சேதமான வீட்டிற்கு ரூ.4,000, முழுவதும் சேதமான வீட்டிற்கு ரூ.8,000 வரை நிவாரணம் வழங்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News October 18, 2024

திருச்சி – விருதுநகர் ரயில் பயணிகள் மகிழ்ச்சி

image

விருதுநகர் – திருச்சி இடையே உள்ள மாவட்ட பயணிகளின் வசதிக்காகவும், அரசு, தனியார் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் வசதிக்காக டெமு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. தினமும் இரு முறை இந்த ரயில் ஆறு பெட்டிகளுடன் சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக திருச்சி சென்றடையும். தற்போது பயணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 6 பெட்டிகளை சேர்த்து மொத்தம் 12 பெட்டிகளுடன் ரயில் செல்கிறது.

News October 18, 2024

820 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின

image

சிங்கம்புணரி, சிவகங்கை, காளையார்கோவில், சாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிணறு, மானாவாரி மூலம் 1.25 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். நெல் நடவு செய்து 10 நாட்களே ஆன நிலையில் தொடர் மழை பெய்ததால்,516 விவசாயிகளுக்கு சொந்தமான 820 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. மழைநீர் மூழ்கிய பயிர்களுக்கு அரசு இழப்பீடு அறிவிக்கும் பட்சத்தில் அத்தொகை கிடைக்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News October 18, 2024

பாம்பு கடியால் இதுவரை 160 பேர் பாதிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் பாம்புகள் கடிப்பதால் அரசு மருத்துவமனைக்கு பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் பாம்பு கடியால் இந்த வருடத்தில் (2024) மட்டும் 160 பேர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

மாவட்டத்தில் 13 வீடுகள் சேதம்

image

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக நேற்று (அக்.17) சிவகங்கையில் ஆறு வீடுகளும், திருப்புவனம்,காரைக்குடி, திருப்பத்தூர்,காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய இடங்களில் 1 வீடும், சிங்கம்புணரியில் இரண்டு வீடுகள் என மொத்தம் 13 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி,திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் சிவகங்கை வட்டாட்சியர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.