India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையிலிருந்து ஷேர் ஆட்டோவில் தாயமங்கலம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு மதுரை நோக்கி ஆட்டோ சென்றபோது திருப்பாச்சேத்தி அருகே மாநாடு பாலம் அருகே சென்றபோது ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த கார் ஆட்டோவில் மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, சிவகங்கையில் எழிலரசி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் மற்றும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (23.03.2024) ஆஷா அஜித், மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை(24.03.2024) அன்று அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் இப்பயிற்சியினை திறம்பட பெற்று, தங்களுக்கான தேர்தல் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தேவநாதன் யாதவ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி கலைஞர் பவளமாளிகையில் நேற்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவு துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர். பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் S.மாங்குடி மாவட்ட துணை செயலாளர் த.சேங்கைமாறன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரையை சேர்ந்த துரைப்பாண்டியின் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக அதிமுக நகர கழக செயலாளர் விஜிபோஸ் ரூ.8 லட்ச பணம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல் 4 லட்சம் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து அவதூறாக பேசி கம்பியால் தாக்கியதாக காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் மீது புகார் அளித்த நிலையில் அவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.