India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டாரத்தில் ஒரு வாரமாக மழையின்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் இன்று திடீரென மழை பெய்தது. லேசாக ஆரம்பித்த சாரல் மழை மெல்ல மெல்ல கனமழையாக பெய்து வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் மகிழ்விக்கும் என நினைத்த நிலையில், வந்த மழை 10 நிமிடத்தில் நின்றது. இதனால் மழை வந்தது விழுந்தது ஏமாற்றி சென்றாக பொதுமக்கள் வேதனையடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் ராக்கு இவரது மகள் பாண்டிச்செல்வி எட்டாம் வகுப்பு பயிலும் போது உடல் நலக் குறைவால் மூன்று ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். மகளை நினைத்து வாடிக் கொண்டிருந்த தாய் ராக்கு அன்னையர் தினத்தன்று இறந்த பாண்டி செல்வியின் புகைப்பட கட்டவுட் படம் வைத்து பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடத்தினார். இச்செயலால் உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் ராக்கு இவரது மகள் பாண்டிச்செல்வி எட்டாம் வகுப்பு பயிலும் போது உடல் நலக் குறைவால் மூன்று ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். மகளை நினைத்து வாடிக் கொண்டிருந்த தாய் ராக்கு அன்னையர் தினத்தன்று இறந்த பாண்டி செல்வியின் புகைப்பட கட்டவுட் படம் வைத்து பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடத்தினார். இச்செயலால் உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 90.89% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.38 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.23 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்கள் 92.31 % பேரும், மாணவியர் 96.46 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 94.57 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
தென்மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால், சிவகங்கை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் மதகு அணை இடது பிரதானக் கால்வாயில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு நேற்று தண்ணீா் திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்று (மே 14) வரை தண்ணீா் திறக்கப்படும். புதன்கிழமை முதல் விரகனூர் மதகு அணையிலிருந்து பார்த்திபனூர் மதகு அணைவரை பகுதி இரண்டில் உள்ள சிவகங்கை மாவட்ட பூர்வீக வைகைப் பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும்
முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விருப்பமுள்ள மாணவர்கள் வரும் ஜூன். 07ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையமான” சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாணவர்கள் நேரில் வந்து Online மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் அருகே டி.மாம்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்துவதாக டி.மாம்பட்டி விஏஓ லாவண்யா எஸ்.எஸ். கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், டி.மாம்பட்டிபகுதியைச் சேர்ந்த சுப்புரமணியன் (66) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.