Sivagangai

News April 2, 2024

சிவகங்கை: 1800 425 7036 எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

image

தேர்தல்  நடத்தை  விதிமுறைகள் அமலில்  உள்ளதை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் குற்றச்செயல்களில்  ஈடுபடும்  நபர்கள் குறித்தும் மற்றும் புகார்கள் குறித்தும், பொதுமக்கள்  1800 425 7036  என்ற  கட்டணமில்லா  இலவச  எண்ணில்  தொடர்பு  கொண்டோ  அல்லது Cvigil செயலி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News April 2, 2024

சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு

image

நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மானாமதுரை, காரைக்குடி, காளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது

News April 2, 2024

சிவகங்கை: நாய்க்கு தடுப்பூசி போட வேண்டும்

image

சிவகங்கையில் நாய் வளர்ப்பவர்கள் பிறந்த 3 மாதத்தில் தங்களது நாய்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும். பிறகு முறையாக கால்நடை மருத்துவரை அணுகி, அவ்வப்போது தடுப்பூசிகள் போட வேண்டும். தொடர்ந்து, 3ம் நாள், 7ம் நாள், 28ம் நாள் ஆகிய நாட்களில் முறையாக மொத்தம் 4 தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளுதல் பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2024

உதவித்தொகையை கொச்சைப்படுத்தாதீர்கள் 

image

சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ‘திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம், என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொருளாதார யுக்தி. இந்த திட்டத்தை பலர் கொச்சைப் படுத்துகிறார்கள், மேல்தட்டில் இருந்துக் கொண்டு இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும் அவர்களுக்கு, ரூ.1000, ஏழைகளின் கஷ்டமும் தெரியாது. முக்கியமாக அவர்களுக்கு எந்த பொருளாதாரமும் தெரியாது எனக் கூறினார்.

News April 2, 2024

திறந்தவெளி சிறைச்சாலை காவலர் விபத்தில் பலி

image

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் மறவமங்கலம் அருகே திறந்தவெளி சிறைச்சாலையில் காவலராக பணிபுரிந்து வந்த அருளானந்த் என்பவர் குண்டாக்குடை அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து காளையார் கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 1, 2024

கலெக்டர் பரிசீலனை செய்ய மதுரை கிளை உத்தரவு

image

கோட்டூர் கிராமத்தில் கோவில் திருவிழாவை  முன்னிட்டு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார். இம்மனுவை நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பிறகு மனுதாரர் மனுவை சிவகங்கை கலெக்டர் பரிசீலனை செய்து நாளைக்குள் உரிய உத்தரப் பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.

News April 1, 2024

சிவகங்கை: ஆறு பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

image

திருப்புவனம் நாடார் தெருவில் நேற்று இரவு 9 மணிக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் லோடுமேன் கோபி என்பவரை கொடூரமாக தாக்கி அவரது தலையில் கல்லை போட்டுவிட்டு ஓடினர். இதையடுத்து கோபி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 1, 2024

2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் 20வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால்  இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் First Randomization அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள்  ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெறும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

News March 31, 2024

சிவகங்கை தொகுதி எப்படி மக்களே?

image

மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம். இங்கு கார்த்திக் சிதம்பரம்(காங்), சேவியர்தாஸ்(அதிமுக), தேவநாதன்(பாஜக), எழிலரசி(நாம் தமிழர்) ஆகியோர் களம் காண்கின்றனர். இந்நிலையில், இத்தொகுதியில் 4 முனை போட்டி நிலவுவதால், யாருக்கு மகுடம் சூட்டும். இத்தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?

News March 31, 2024

அதிமுக வேட்பாளர் கோவிலில் சாமி தரிசனம் 

image

சிவகங்கை மக்களவை (ம) சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் போட்டியிட்டபோது சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னரே வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதேபோல், பிரச்சாரத்தைத் தொடங்கும் முன் வேட்பாளர் சேவியர்தாஸ் கோயில்களில் சாமி கும்பிட்ட பின்னரே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். 

error: Content is protected !!