India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் 12, 471 குடிசை வீடுகள் அரசின் ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் காங்கிரீட் வீடுகளாக மாற்று திட்டம் ஜூனிற்கு பின் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 2022 ம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசை வீடுகளில் உள்ளோர் பற்றிய கணக்கெடுப்பில், மாவட்ட அளவில் 12, 471 குடிசைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரில் நாதஸ்வரம், தவில் கற்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதால் குருகுல முறைப்படி மடாலயத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோயில் நிகழ்ச்சி, திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அங்கு முக்கிய பங்கு வகிப்பது நாதஸ்வரமும் , தவிலும் தான். தற்போது இசை வாத்திய வாசிப்பு குறைந்து வரும் நிலையில் பல இளைஞர்கள் ஆர்வமுடன் கற்கத் தொடங்கியுள்ளனர்.
சிவகங்கை ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த மூன்றாண்டுகளில் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தில் 2, 37, 897 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றனா் மகளிா் இலவசப் பயணத் திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 6,22,04,327 போ் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்தனா்.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம் 33,568, ‘பயனடைந்துள்ளனர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட தலைநகரான இங்கிருந்து தான் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, மானாமதுரைக்கு அதிகளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து தரவில்லை. ரயில் நிலையத்தில் பின்னால் தனியார் பங்களிப்புடன் அமைத்த நவீன கழிப்பறை செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது. நடவடிக்கை எடுக்க ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் சிவகங்கையில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (மே 17) மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்தில் மின் தடங்களை பராமரிப்பதற்காக உள்ள சிறப்பு ரயிலை நிறுத்தும் வசதி ஞாயிற்றுக்கிழமை(மே 19) அன்று ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக தனி ரயில் பாதை அமைத்து தற்போது உள்ள ரயில் பாதைகளோடு இணைக்கும் வேலை நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வியாண்டின் இட ஒதுக்கீட்டின் படி, மேற்படிப்பில் சேருவதற்கான சான்று தேவைப்படுவோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது exwelsvg@tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று(மே 15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிங்கம்புணரியில் 14 செ.மீட்டரும், திருப்புவனம் பகுதியில் 2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கோடை தொடங்கியது முதல் ஆங்காங்கே கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையே 14 வயதுக்கு உபட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு, சிவகங்கை மாவட்ட அணி வீரா்கள் தோ்வு மே 19 ஆம் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி ’ஆ’ வலைப் பயிற்சி மைதானத்தில், அன்றைய தினம் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.