Sivagangai

News May 21, 2024

இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது

image

சிவகங்கை அருகே உள்ள வேலுநாச்சியார் தெருவை சேர்ந்த நிதிஷ் (24) என்பவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்வதில் பாண்டி செல்வம், குமனேஸ்வரன் , பாலசுப்ரமணியன், அமர்நாத், 17 வயதான இரு சிறார்கள் என்பதும் மேலும் முதல்குற்றவாளியான சுகுமாறன் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. பிறகு அவர்கள் அனைவரையும் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

News May 21, 2024

பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவக்கம்

image

சிவகங்கை அருகே அம்பலக்காரன்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www. tnpoly. in என்ற இணையதளம் மூலம் 24.5.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று அறிவித்துள்ளார்..

News May 21, 2024

சிவகங்கை: மாணவர்களுடன் கலந்துரையாடல்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி நிறுவனத்திற்கு சிவகங்கை முன்னாள் எம்பியும் முன்னாள் மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் கல்லூரிக்கு வருகை புரிந்தார். பின்னர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் வேளாண்மை குறித்து கலந்து உரையாடினார்.

News May 20, 2024

மாணவர் விடுதியில் சமையல் வேலை செய்பவர் தற்கொலை

image

சூரக்குடி பகுதியை சேர்ந்த சஞ்சய் பிரபாகரன் மனைவி அரிய செல்வி (30). சிவகங்கை பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் சமையலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனம் உடைந்த அரிய செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அரிய செல்வி இன்று உயிரிழந்தார்.

News May 20, 2024

சிவகங்கை: நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

கல்வி கடன் குறித்து அறிந்து கொள்ளலாம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள்  உயர் கல்வி பயில்வதற்கு தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கல்வி கடன் வேறுபடும். மேலும் விபரங்களுக்கு https://www.vidyalakshmi.co.in/Students/ என்ற இணையதள முகவரி மூலம் மாணாக்கர்களுக்கு கல்வி கடன் குறித்து ஏற்படும் சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News May 19, 2024

சிவகங்கை: மிதமான மழைக்கு வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை சிவகங்கை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 19, 2024

சிவகங்கை எஸ்.பி. தலைமையில் ஆய்வு கூட்டம்

image

சிவகங்கை குற்றப்பிரிவு சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

News May 18, 2024

சிவகங்கை பறவைகள் சரணாலயத்தி சிறப்பு!

image

சிவகங்கையில் உள்ள வேட்டங்குடிப்பட்டியில் அமைந்துள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். இது 40 ஹெக்டோ் பரப்பளவில் வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி மற்றும் சின்ன கொள்ளுக்குடி என்ற ஊா்கிளன் நீா்நிலைகளை உள்ளடங்கியது.சரணாலயம் குளிர் காலங்களில் இடம் பெயரும் பறவைகளுக்கான இயற்கை வாழ்விடமாகும். இங்கு சுமார் 217 வகையான 8000 வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன.

News May 18, 2024

சிவகங்கை : 104 அலைபேசிகள் ஒப்படைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் திருடுபோன மற்றும் தொலைந்து போன அலைபேசிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்.பி.,நேற்று அலுவலகத்தில் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் ஏப். மாதம் வரை தொலைந்து போன 104 அலைபேசிகள் சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 54 ஆயிரம். கண்டுடிக்கப்பட்ட போன்களை அதன் உரிமையாளரிடம் எஸ்.பி.,யும்., கூடுதல் எஸ்.பி.,யும் வழங்கினர்.

error: Content is protected !!