India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணி வேலுநாச்சியார் 18 நூற்றாண்டில், சிவகங்கையின் ராணியாகவும், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப் போராட்ட வீராங்கனையாகவும் இருந்தவர். மேலும் இவர் பல மொழிகளில் புலமை வாய்ந்தும் இருந்தார். ஆங்கிலேயருக்கு எதிராக உருது மொழியில் ஹைதர் அலியிடம் பேசி, அவரின் உதவியுடன் சோழவந்தான், சிலைமான், திருப்புவனம், முத்தனேந்தல் நகரங்களை வென்றார். 1746இல் பிறந்த வேலுநாச்சியார் 1796 இல் இறந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு சோப்பு, தேங்காய் எண்ணெய் வாங்கி கொள்ள மாதம் தோறும் வழங்கும் தொகை பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் ரூ.9 லட்சம் கையாடல் செய்ததாக, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலக உதவியாளர் மீது 2023 அக்டோபரில் வழக்கு பதிந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படும் மகளிர் விடுதிகள், இல்லங்கள், காப்பகங்கள் நடத்துபவர்கள் அனைவரும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014ன்படி பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். http://tnswp.comஎன்ற இணையதளத்தில் பதிவை மேற்கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தரப்பில் நேற்று(மே.26) தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் எழுவங்கோட்டை செல்லும் சாலையை கடக்க முயன்ற பனந்தோப்பு சபரிமுத்து என்பவர் மீது வாகன மோதி உயிரிழந்தார். அதேபோல் நல்லாங்குடி விளக்கு அருகே மாவிடுத்திகோட்டையை சேர்ந்த குப்புசாமி என்பவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவரும் சம்பவ இடத்தில் பலியானார். சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூலம் 8, 215 பேர்களுக்கு ரூ.4.78 கோடி மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இம்மாவட்டத்தில் 10 லட்சத்து 68 ஆயிரத்து 446 பேர் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டம் மூலம் 8, 215 பேர்களுக்கு ரூ.4 கோடியே 78 லட்சத்து 66 ஆயிரத்து 704 மதிப்பிலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கல்லல் அருகே உள்ள செம்பனுார் சேவுகப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 17 மாடுகள் கலந்து கொண்டன. 153 வீரர்கள்
காளைகளை அடக்க களமிறங்கினர். இதில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை மே 28 முதல் தொடங்குகிறது என முதல்வர் கே.சுடர்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, இக்கல்லுாரியில் மே 28 அன்று சிறப்பு பிரிவுகளான மாற்றுத்திறனாளி, விளையாட்டு பிரிவு, தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படும்” என்றார்.
சிவகங்கை மாவட்டம், முழுவதும் இணைய வழியில் உணவு வினியோகம் உள்ளிட்ட சேவை பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா Gig தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான சிறப்பு முகாம் தற்சமயம் முதல் ஜீன் 14ம் தேதி வரை தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே முகாமிற்கு வருகை தந்து உறுப்பினர்கள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இன்று அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலை புளியால் சந்திப்பில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற டெம்போ வேன் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 20 பேர் காயமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் புறவழி சாலைகளில் மின்விளக்கு இல்லாததால் தொடர் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் கூறியுள்ளதாவது, “எலிபேஸ்ட் 3 % மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த அங்கீகாரம் பெறாத பூச்சிக்கொல்லி மருந்துகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இனிவரும் காலங்களில் ஏதேனும் விற்பனை நிலையங்களில் எலி பேஸ்ட் மருந்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.