Sivagangai

News March 20, 2024

தேர்தல்: சிவகங்கை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40% மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்களுக்கு சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம், தபால் வாக்கு அளிக்க படிவம் 12டி மார்ச் 21,22 தேதியில் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.

News March 19, 2024

சிவகங்கை: ரூ.50,000 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள், வியாபாரிகள் ரூ.50,000 க்கு மேல் ரொக்கம் மற்றும் ரூ.10,000 க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை உரிய ஆவணங்களுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள கலெக்டர் ஆஷா அஜித், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பொருட்களை திரும்பப்பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குறைதீர் கமிட்டியிடம் ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கிகொள்ளலாம் எனக் தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

சிவகங்கை: கேமராவுடன் கூடிய பறக்கும் படை

image

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகளில் ,சிவகங்கை மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டு வரும்நிலையில், உடனடியாக தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.அதிகாரிகள் பணி செய்யும் வாகனத்தில் 5ஜி மற்றும் சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய 360 டிகிரி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News March 19, 2024

சிவகங்கை : மார்ச் 24ல் தேரோட்டம் 

image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் அருகே பட்டமங்கலத்தில் அழகுசவுந்தரி அம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவில் மார்ச் 24ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 6ல் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் பூதமெடுப்பு , பிடிமண் கொடுத்தல் நடைபெற்றது. நேற்று 3ம் திருநாளை முன்னிட்டு இரவு அன்ன வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது

News March 18, 2024

சிவகங்கை ஆட்சித்தலைவர் ஆலோசனை

image

சிவகங்கை மாவட்டம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அச்சகங்களின் உரிமையாளர்கள், நகை அடகு கடை நடத்துபவர்கள் மற்றும் திருமண மண்டபங்களில் உரிமையாளர்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் ஆகியோர்கள் அனைவரும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு வியாபாரம், தொழில் போன்றவற்றை முறையாக செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

News March 18, 2024

எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

image

சிவகங்கையில் எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தேர்தல் பணி குழு மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அப்துல்கலாம் தலைமையில் தேர்தலுக்கான பணிகள் குறித்தும், தேர்தல் சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளும் செய்யப்பட்டது. இறுதியாக பொறியாளர் அணியின் மாவட்ட தலைவர் அகமது அலி நன்றியுரை நிகழ்த்தினார்.

News March 18, 2024

சிவகங்கை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு

image

மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் கார்த்தி சிதம்பரம் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது.

News March 18, 2024

சிவகங்கை மக்களின் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

தென்னை மரங்களில் நோய் பரவல்

image

திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன. தென்னந்தோப்புகளில் உள்ள மரங்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன் வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களிலும் வெள்ளை ஈ தாக்குதல் பரவி வருகிறது. தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் 40 ஆண்டு பயன்தரக் கூடிய மரங்கள் கருகி பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!