India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்மரபினர் நல வாரியத்தில், உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம் வருகின்ற 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில், சீர்மரபினர் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை காளையார்கோவில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் முன்பாக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பிலான மாமன்னர் மருதுபாண்டியர்கள் கலையரங்கத்தை சிவகங்கை எம்எல்ஏ PR.செந்தில்நாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள். உடன் அதிமுக ஒன்றிய கழக செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நேற்று சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் 21 ஜோடிகளுக்கு அரசின் சார்பில் நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இக்கோயிலில் ஆதிதிராவிடர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை. இதை கண்டித்து போஸ்டர் ஒட்டியிருந்தனர் இந்நிலையில் நேற்று நடந்த திருமணவிழாவில் அரசு சார்பில் அமைச்சர், கலெக்டர் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை
சிவகங்கை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் ரேசன் கடைகளில் காலியாக உள்ள 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், தமிழில் எழுத படிக்க தெரிந்த, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 07.11.2024-க்குள் <
சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க மாநாடு நடத்தப்படுகிறது. இதில், கலந்துகொள்ள முனைவர் சேவற்கொடியோன் 9443004322 மற்றும் சிவகங்கை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி ஆகியோரை தொடர் கொள்ளலாம்.
வரும் அக்.24 அன்று திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச்சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, கவுரவிக்கப்படவுள்ளது. கலந்து கொள்ள வருபவர்கள் கண்டிப்பாக டூ வீலரில் செல்வதற்கு அனுமதியில்லை. மேலும் சொந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஓன் போர்டு நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் நாளை காலை 8.30 வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்புவனம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த பால்வண்டியினை மறைத்து சோதனை செய்தபோது, அதில் 96 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும், பால்வண்டியையும் பறிமுதல் செய்து திருப்புவனத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் முனியசாமியை திருப்புவனம் போலீசார் கைது செய்து இன்று விசாரித்து வருகின்றனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் காரைக்குடி வட்டத்தில் அக்.22 அன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 04.30 மணி முதல் 06.00 மணி வரை பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் காரைக்குடி பி.எல்.பி மஹாலில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. மேற்படி கலந்தாய்வு கூட்டத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், தமிழகத்தில் அரசின் கொள்கையும், மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கக்கூடிய கொள்கையும் இரு மொழித் திட்டம் தான். இதனை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சிந்தனை இருக்கின்றதோ அதற்கு நேர்மறையான கருத்து தெரிவிப்பவர் தான் தமிழக கவர்னர் மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகள் இருக்கிறது என்பதே தவறு என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.