India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும், 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே c VIGIL என்ற இணையதள வாயிலாக தேர்தல் தொடர்பான புகார், தகவல் தெரிவிப்பதன் அடிப்படையில் , குறிப்பிட்ட இடத்திற்கு பறக்கும் படை அலுவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
தேனி பகுதியைச் சேர்ந்தவர் சிவனேஷ். இவர் தனது குடும்பத்துடன் சிவகங்கையில் உள்ள காளி கோயில் வழிபாட்டுக்காக திருப்புவனத்தில் உறவினா் வீட்டுக்கு வந்து தங்கினாா். இந்நிலையில் நேற்று சிவனேஷ் மகன் மாதேஷை (14) விஷப்பூச்சி கடித்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மாதேஷை பரிசோதித்த மருத்துவா்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 21 வேட்புமனுக்கள் நேற்று ஏற்றுக் கொள்ளப்பட்டன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளா் அ. சேவியா் தாஸ், பாஜக வேட்பாளா் தி. தேவநாதன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி.எழிலரசி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ரஞ்சித்குமாா் பாலுசாமி மற்றும் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024ஐ முன்னிட்டு, பொது தேர்தல் பார்வையாளர் ஹரிஷ், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் வி.திரிபாதி,I.R.S., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆகியோர் தேர்தல் தொடர்பாக உரிய பணிகளை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக நியமிக்கப்பட்டுள்ள நியமன அலுவலர்களுடன் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக பொது தேர்தல் பார்வையாளர் ஹரிஷ், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ் குமார், திரிபாதி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் ஆகியோர் நேரில் சென்று (மார்ச்-28)இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கையில் பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று ஏற்கப்பட்டன. மொத்தமாக 28 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரீசிலனை இன்று நடந்தது. இதனிடையே, 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை, திருப்பத்தூரில், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பணிமனை என்ற அதிமுக அலுவலகம் மாவட்ட அவை தலைவர் ஏவி.நாகராஜன் தலைமையில், நகரச் செயலாளர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவியர்தாஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பம் இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி கலெக்டர் கீழ்க்கண்ட விழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். இதில், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேவியா்தாஸுக்கு ரூ.91.90 லட்சத்தில் அசையும் சொத்துகள், ரூ.5.74 கோடியில் அசையாச் சொத்துகள் உள்ளன. இவரது மனைவி மரிய திருஷ்டி ராதிகாவுக்கு ரூ.97.12 லட்சத்தில் அசையும் சொத்துகள் உள்ளன. இதில் சேவியா்தாஸின் கையிருப்பாக ரூ.25 ஆயிரம், ரூ.48.48 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்கம், ஓா் இரு சக்கர வாகனம், ஒரு காா் உள்ளது.
சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு, 31-சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்கு பொது தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஹரிஷ் இன்று (27.03.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆஷா அஜித் அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.