India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பச்சேரி சுந்தராஜன், சிவகங்கை மாவட்ட கழகத் துணைச் செயலாளர் த.சேங்கைமாறன், மானாமதுரை சேர்மன் மாரியப்பன் கென்னடி, ஏராளமானோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை அருகே சீனமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் 13 வயதுடைய சிறுமியிடம் வீட்டிற்கு பைப் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டு பாலியல் துன்புறுத்தியதாக சிறுமியின் தாய் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் புளியங்குடி பட்டியை சேர்ந்த சுரேஷ் (24) மீது (ஏப்ரல்.02) நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற 5 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதனையொட்டி நேற்று காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் வேட்பாளர் தேவநாதன் யாதவ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பத்தூா் அருகே குமாரப்பேட்டையில் உள்ள பூமலச்சியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, கிராம பொதுமக்கள் பூமலச்சியம்மன் கோயிலில் அபிஷேக, ஆராதனைகளை மேற்கொண்டு ஊா்வலமாக மஞ்சுவிரட்டு தொழுவுக்கு வந்தனா். அங்கிருந்த காளைகளுக்கு மாலை, வேட்டி அணிவித்து மரியாதை செய்தனா். தொழுவிலிருந்து 50 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன .
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே வாக்களிப்பதற்கு எந்தவொரு நபரும் ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆஷா அஜித் நேற்று எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் மற்றும் புகார்கள் குறித்தும், பொதுமக்கள் 1800 425 7036 என்ற கட்டணமில்லா இலவச எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது Cvigil செயலி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மானாமதுரை, காரைக்குடி, காளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது
சிவகங்கையில் நாய் வளர்ப்பவர்கள் பிறந்த 3 மாதத்தில் தங்களது நாய்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும். பிறகு முறையாக கால்நடை மருத்துவரை அணுகி, அவ்வப்போது தடுப்பூசிகள் போட வேண்டும். தொடர்ந்து, 3ம் நாள், 7ம் நாள், 28ம் நாள் ஆகிய நாட்களில் முறையாக மொத்தம் 4 தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளுதல் பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ‘திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம், என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொருளாதார யுக்தி. இந்த திட்டத்தை பலர் கொச்சைப் படுத்துகிறார்கள், மேல்தட்டில் இருந்துக் கொண்டு இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும் அவர்களுக்கு, ரூ.1000, ஏழைகளின் கஷ்டமும் தெரியாது. முக்கியமாக அவர்களுக்கு எந்த பொருளாதாரமும் தெரியாது எனக் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் மறவமங்கலம் அருகே திறந்தவெளி சிறைச்சாலையில் காவலராக பணிபுரிந்து வந்த அருளானந்த் என்பவர் குண்டாக்குடை அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து காளையார் கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.